»   »  விஜயகாந்துக்கு மாலைபோட்டு அமைதியாக பிறந்த நாள் கொண்டாடிய சண்முகப் பாண்டியன்!

விஜயகாந்துக்கு மாலைபோட்டு அமைதியாக பிறந்த நாள் கொண்டாடிய சண்முகப் பாண்டியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இந்தப் பிறந்த நாளை அவர் தனது தந்தை விஜயகாந்த், தாயார் பிரேமலதா, அண்ணன் விஜய பிரபாகரனுடன் தனது இல்லத்திலேயே கொண்டாடினார்.

Shanmuga Pandiyan celebrates birthday

சகாப்தம் படத்தில் நாயகனாக அறிமுகமான சண்முகப் பாண்டியன், அதன் பிறகு தமிழன் என்று சொல் படத்தில் அப்பா விஜயகாந்துடன் நடித்தார். ஆனால் அந்தப் படம் பாதியில் நிற்கிறது.

புதிய படத்தில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

Shanmuga Pandiyan celebrates birthday

இந்த நிலையில் நேற்று அவருக்குப் பிறந்த நாள். ஒரு நடிகராக அவர் கொண்டாடிய முதல் பிறந்த நாள் இது. இதனை அவர் விமரிசையாகக் கொண்டாடவில்லை.

வீட்டில் அப்பா விஜயகாந்துக்கு மாலை அணிவித்து ஆசி பெற்று எளிய முறையில் கொண்டாடினார்.

Shanmuga Pandiyan celebrates birthday

தாயார் பிரேமலதா மற்றும் அண்ணன் விஜய பிரபாகரன் ஆகியோர் சண்முகப் பாண்டியனை வாழ்த்தினார்கள்.

English summary
DMDK chief Vijayakanth's Son Actor Shanmugapandiyan has celebrated his birthday at home.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil