»   »  தந்தை வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்!

தந்தை வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?

தனது ரசிகர்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்த இணையதளம் தொடங்கியுள்ளார் நடிகர் சண்முக பாண்டியன்.

கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் படத்தால் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Shanmugapandian to launch website for fans

திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.

இப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி​ 2018​ நாளை காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்துள்ளார்.

Shanmugapandian to launch website for fans

இந்த இணைய தளம் மூலம் ரசிகர்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சின்ன கேப்டன்.

English summary
Vijayakanth's Son Shanmugapandian will launch a website for contacting his fans regularly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X