»   »  'தலைவா டைம் டு லீட்...' - விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறாரா சாந்தனு?

'தலைவா டைம் டு லீட்...' - விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறாரா சாந்தனு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், சிபிராஜ் இருவரும் ட்விட்டரில் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளனர்.

கார் வாங்குவதற்கே லைசென்ஸ் கட்டாயமாகத் தேவைப்படும்போது அரசியல்வாதிகளுக்கு தகுதி வேண்டாமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இளம் நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு ஆகியோர் மறைமுகமாக ட்விட்டரில் அழைப்பு விடுத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகிறார்கள்.

காருக்கு தேவை லைசென்ஸு - அரசியலுக்கு தேவை ? :

'சாலை விபத்துகள் நிகழாம இருக்குறதுக்காக கார் வாங்கும்போது லைசென்ஸ் கட்டாயம் கேக்குறாங்க. அப்படினா, அதுக்கும்... அடிப்படைக் கல்வி அறிவு கட்டாயமாகணும்னு நினைக்கிறேன்...' என சூசகமாக அரசியல்வாதிகளைப் பற்றி கமென்ட் அடித்துள்ளார் சாந்தனு பாக்யராஜ்.

தைரியமான ஆளாச்சே :

சாந்தனுவின் ட்வீட்டுக்கு ரசிகர் ஒருவர், 'எங்க சொல்லு... நீதான் தைரியமான ஆளாச்சே...' என சூனாபானா பஞ்சாயத்தைக் கலைக்கும் மீம் போட்டுள்ளார்.

மாட்டிவிட்ட சிபிராஜ் :

சாந்தனுவின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள சிபிராஜ், ' அடிப்படை கல்வி கட்டாயம் - அரசியல்வாதிகளுக்கா...' எனக் கேட்டிருக்கிறார்.

ஆன்ட்டி இண்டியன் :

'அதைச் சொன்னா நம்மள ஆன்ட்ட்டி இண்டியன்னு சொல்லிடுவாங்க மச்சி...' என சிபிராஜை மென்ஷன் செய்து பதிவிட்டுள்ளார் சாந்தனு.

சொன்னாதான் மச்சி ப்ரோ இண்டியன் :

'சாந்தனுவின் கமென்டுக்கு ரிப்ளை அளித்துள்ள சிபிராஜ், 'இதையெல்லாம் சொன்னாதான் மச்சி Pro-Indian' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவா :

சிபிராஜ் வெளிப்படையாகக் கூறியதைப் பார்த்து அவரைக் கலாய்க்கும் விதமாக, 'தலைவா... டைம் டு லீட்' என ரிப்ளை செய்திருக்கிறார் சாந்தனு.

விஜய்க்கு அழைப்பா? :

சிபிராஜ், சாந்தனுவின் ட்வீட்டுகளைப் பார்த்த பலரும் விஜய்யை அரசியலுக்கு அழைப்பதாக நினைத்து 'ஆளப்போறான் தமிழன்' விஜய் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
Shanthanu and Sibiraj are questioning whether basic education is qualification for politicians. Fans are encouraging Sibiraj and Shanthanu for calling vijay to politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil