கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய திரை பிரபலங்களின் புகைப்படங்கள்!

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்பது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனை குழந்தையாக பாவித்து நாம் வழிபடுவதால் நம்முடைய வீட்டில் மகிழ்ச்சி, ஞானம், அமைதி நிலவும் என்பது ஐதீகமாக உள்ளது.

கிருஷ்ணரின் அவதாரத்தை போற்றி வழிபடும் திருநாள், கிருஷ்ண ஜெயந்தியாகும். தர்மத்தை நிலை நாட்டுவதுடன், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தெய்வ நிலைக்கு உயர்த்திக்் கொண்டு, இறைவனை அடையும் வழியையும், மனிதர்கள் தங்களின் கர்மவினைகளால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவும் வழிகாட்டும் பகவத்கீதையை உலகிற்கு அருளுவதற்காக எடுக்கப்பட்டதே கண்ணன் அவதாரம் ஆகும். இந்த நாளில், வீட்டின் வாசலில் கோலமிட்டு, பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதத்தை வரைய வேண்டும். கிருஷ்ணருக்கு பிடித்தமான முறுக்கு, சீடை, அதிரசம், லட்டு, தட்டை என பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்துவிட்டு, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ராதா, கிருஷ்ணர் வேடமிட்டு வழிபடுவது வழக்கமாக உள்ளது.

Krishna jayanthi indraja shankar
Photo Credit:

சாந்தி ப்ரியா: அந்த வகையில் பிரபலங்கள் பலர் தங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி உள்ளனர். நடிகை பானுப்ரியாவின் தங்கையும், நடிகையுமான என்கிற சாந்தி ப்ரியா வீட்டில் கிருஷ்ண ஜெய்ந்தியை கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Krishna jayanthi indraja shankar
Photo Credit:

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் தனது கணவர் ராகுல் மற்றும் மகள் ரூபிகாவுடன் கிருஷ்ணா செய்தி கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே படத்தில் நடித்துள்ளார். இவர், 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

Krishna jayanthi indraja shankar
Photo Credit:

இந்திரஜா சங்கர்: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தனது மகன் நட்சத்திரனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடி உள்ளார். இந்திரஜா விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தையும் பிறத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X