»   »  சீக்கிரம் நல்ல முடிவு எடுங்க, அரசியலில் 'கைட்' பண்ண நான் இருக்கேன்: ரஜினியின் ஸ்டைல் குரு

சீக்கிரம் நல்ல முடிவு எடுங்க, அரசியலில் 'கைட்' பண்ண நான் இருக்கேன்: ரஜினியின் ஸ்டைல் குரு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சீக்கிரமாக அரசியலுக்கு வாங்க, வழிகாட்ட நான் தயாராக உள்ளேன் என்று பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் குரு பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா. இந்நிலையில் அரசியலுக்கு வர உள்ள ரஜினிகாந்துக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளார் சத்ருகன் சின்ஹா.


இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


ரஜினி

தமிழகத்தின் டைட்டானிக் ஹீரோ மற்றும் இந்தியாவின் மகனான- பாசத்திற்குரிய ரஜினிகாந்த், எழு, எழு, எழு. இது எழ வேண்டிய சரியான நேரம்.


தேசம்

தேசம்

ரஜினி அரசியலுக்கு வந்து மக்கள் மற்றும் நாட்டின் நலனை காப்பாற்றுவதை பார்க்க தேசம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சத்ருகன் சின்ஹா ட்வீட்டியுள்ளார்.


மக்கள்

மக்கள்

மக்கள் உங்களுடன் உள்ளனர். உங்களுடன் சேர தயாராக உள்ளனர். வேறு யாருடனோ சேர்வதற்கு பதில் மற்றவர்கள் உங்களுடன் சேர்வது மிகவும் நல்லது.


முடிவு

முடிவு

குடும்பத்தார், நெருங்கியவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்து பேசி விரைவில் சரியான முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன். எவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.


ரஜினி

ரஜினி

நண்பனாக, ஆதரவாளராக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக எப்பொழுதும் ரஜினி பக்கம் உள்ளேன். தற்போதும் ஏதாவது உதவி அல்லது ஆதரவு தேவைப்பட்டால் என்னை நம்பலாம் ரஜினி. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவ தயாராக உள்ளேன்.


English summary
Bollywood actor Shatrughan Sinha has asked Rajinikanth to take a good decision soon and he is ready to guide the super star in politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil