»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை ஷெரீன் இன்று கார் விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார்.

தனது சொந்த ஊரான பெங்களூரில் இருந்து தனது காதலன் ரோஹன் மற்றும் அத்தை ரொமேனியாஆகியோருடன் காரில் கன்னியாகுமரிக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.

காலை 9 மணியளவில் சேலம் அருகே தீவட்டிப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்ற பஸ்சின் மீதுகார் மோதியது.

இதில் ரொமேனியாவின் கை எலும்பு முறிந்தது. ஷெரீனுக்கும் ரோஹனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.இதையடுத்து மூவரும் ஓமலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

ரொமேனியாவுக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை சேலம் அல்லது வேறு ஊரில் உள்ளபெரிய மருத்துவனைக்குக் கொண்டு செல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஷெரீன் மருத்துவமனையில் உள்ளதை அறிந்து அப் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள்திரண்டனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil