Don't Miss!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கையில் வீரவாளுடன் ராணி போல கம்பீரமாக போஸ் கொடுத்த ஷெரின்!
சென்னை : துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின்
ஸ்டூடண்ட் நம்பர் ஒன்,ஜெயா, கோவில்பட்டி வீரலட்சுமி,விசில் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்பொழுது இரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளவர் கையில் வீரவாளுடன் ராணி போல கம்பீரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
தியேட்டரில் 50 நாட்களை கடந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா.. அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு தெரியுமா?

துள்ளுவதோ இளமை
இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் செல்வராகவன் திரைக்கதையில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்து இருப்பார் பள்ளி கதைக்களத்தில் வெளியான அந்த படம் அப்போது சிறிய சர்ச்சையையும் கிளப்பியது சர்ச்சைகளையும் தாண்டி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஷெரினுக்கு தனி இடம் கிடைத்தது. துள்ளுவதோ இளமை கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து ஷெரினுக்கு படவாய்ப்புகளும் குவிந்தன.

விழாமலே இருக்க முடியுமா
சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விழாமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல் வலையிலே என காதலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் உடனடியாக விசில் என்ற அட்டகாசமான த்ரில்லர் திரைப்படத்தில் நடித்து வித்தியாசத்தை காட்டினார். விசில் திரைப்படம் அப்போது வெளிவந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

வில்லேஜ் ரோலில்
தொடர்ந்து சிட்டி கதைகளில் நடித்து வந்த ஷெரினுக்கு வில்லேஜ் ரோலில் அமைந்தது கோவில்பட்டி வீரலட்சுமி. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பெரிதாக தமிழில் வாய்ப்புகள் அமையாததால் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக நண்பேண்டா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார்.

கையில் வீரவாளுடன்
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் முகத்தை காட்டாமல் இருந்தால் இருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக போட்டியாளராக களமிறங்கி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இதுவரை திரையில் மட்டும் கண்டு ரசித்த ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினனை பார்த்தது முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை கொடுக்க அதில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதி சுற்று வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஷெரினுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளும் ஷெரின் இப்பொழுது கையில் வீரவாளுடன் ராணி போல கம்பீரமாக நிற்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.