Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஷெரினுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை
சென்னை : தனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திரையுலகை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது முறையாக தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஷெரின் வெளியிட்ட பதிவால் அனைவரையும் அச்சமடைய வைத்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட நடிகை
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடத்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரிய அளவில் வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

பிக்பாசால் ரீஎன்ட்ரி
ஆனால் தமிழில் பட வாய்ப்புக்கள் குறைந்ததால் நண்பேன்டா படத்திற்கு பிறகு காணாமல் போனார். 2019 ல் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆனார். பிக்பாசில் கொஞ்சி கொஞ்சி இவர் பேசிய தமிழிலால் இவருக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது.

தவறான சோதனை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான ஷெரின் சோஷியல் மீடியாவில் பல வித்தியாசமான ஃபோட்டோஷுட்கள் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் தகவல் பதிவிட்டார் ஷெரின், பிறகு அடுத்த நாள் மீண்டும் சோதனை செய்து பார்த்ததில் கொரோனா இல்லை என வந்ததாகவும், இதே போல் பலருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறப்படுவதாகவும் சொல்லி பரபரப்பை கிளப்பினார்.

நிஜமாவே கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஷெரின் இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், எனக்கு மீண்டும் கொரோனா பாசிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை காய்ச்சல், தலைவணி, சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளது. என்னை சமீபத்தில் யாராவது சந்தித்திருந்தால் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற அறிகுறிகள் உள்ளதா என கவனியுங்கள்.

ரசிகர்கள் பிரார்த்தனை
பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள், டபுள் மாஸ்க், ட்ரிப்பிள் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். பாதுகாப்பிற்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தையும் செய்து கொள்ளுங்கள் என ஷெரின் குறிப்பிட்டுள்ளார். இதனால் கவலை அடைந்துள்ள அவரது ரசிகர்கள் ஷெரின் விரைவில் குணமடைய பிரார்த்தனையும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.