»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை ஷெரீனுக்கும் பெங்களூரைச் சேர்ந்த மாடல் ரோஷன் என்பவருக்கும் இன்று (11.11.03) நிச்சயதார்த்தம் நடந்தது.விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

பெங்களூரில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஷெரீன் சில கன்னடப் படங்களில் நடித்தார். இதையடுத்துதுள்ளுவதோ இளமை மூலம் தடாலடியாக தமிழில் நுழைந்து தனது கவர்ச்சியால் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுத்தடுத்து வந்த படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால் சான்ஸ்கள் ஒழிந்தன. இதையடுத்து விட்டபடிப்பைத் தொடர பெங்களூருக்கே திரும்பினார்.

அங்கு முன்பு மாடலிங் செய்யும்போது ரோஷன் நண்பரானதாகத் தெரிகிறது.

தமிழ் பட சூட்டிங் ஸ்பாட்டுக்குரோஷன் உள்பட பல மாடல்களுடன் ஷெரீன் வந்து போவதுண்டு. இதில் ரோஷன், ஷெரீனைக் காதலித்துவந்துள்ளார்.

பட சான்ஸ் இல்லாமல் ஊர் திரும்பிவிட்ட ஷெரீனுக்கும் ரோஷனுக்கும் இடையே காதல் சூடு பிடிக்க இதைஅறிந்த இரு வீட்டினரும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து இன்று காலை பெங்களூர் ஜெயநகரில் ஒரு ரெஸ்டாரெண்டில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.மிக எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சினிமாக்காரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. விரைவில்திருமணத் தேதி முடிவு செய்யப்படுமாம்.

ஷெரீனின் பெற்றோரும் மதம் கடந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். தந்தை அலி ஒரு முஸ்லீம்.தாயார் யசோதா இந்து.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil