»   »  உம்மா: ஷில்பா, கெரே மீது வழக்கு

உம்மா: ஷில்பா, கெரே மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்:பொது மேடையில், நடிகை ஷில்பா ஷெட்டியை இறுக்கி அணைத்து தொடர்ந்து முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே மீதும், நடிகை ஷில்பா ஷெட்டி மீதும் ஜெய்ப்பூர் மற்றும் காஸியாபாத் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பார்வையாளராக கலந்து கொண்ட ஷில்பா ஷெட்டியை இறுக்கி அணைத்து முகத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரிச்சர்ட் கெரே.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஷில்பா, கெரேவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில்,இருவர் மீதும் ஜெய்ப்பூர் மற்றும் காஸியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறி இருவர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை பரிசீலித்த நீதிபித தினேஷ் சந்திர குப்தா, இந்தக் காட்சி தொடர்பான ஒரிஜினல் வீடியோ பதிவை அனுப்பி வைக்குமாறு என்.டி.டி.விக்கு உத்தரவிட்டது.

காஸியாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Please Wait while comments are loading...