»   »  ஷில்பாவின் மிஸ் பாலிவுட்

ஷில்பாவின் மிஸ் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் புகழ் ஷில்பா ஷெட்டியின் நடன வண்ணத்தில் உருவாகியுள்ள மிஸ் பாலிவுட் என்கிற இசை நிகழ்ச்சி ஜெர்மனியில் அரங்கேறவுள்ளது.

இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது லண்டன் டிவி நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட இனவெறி சர்ச்சை, பின்னர் ஷில்பா பட்டம் வென்றது ஆகியவை, ஷில்பாவின் செல்வாக்கை வெகுவாக உயர்த்தி விட்டது.

ஐஸ்வர்யா ராயைத்தான் வெளிநாட்டினர் அதிகம் அறிந்திருந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவை ஓவர்டேக் செய்து விட்டார் ஷில்பா. வெளிநாடுகளில் ஷில்பாவின் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது.

இங்கிலாந்தில் அவரது பெயரில் பெர்ஃப்யூம் வெளியிடப்பட்டது. அவருக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தையும் கொடுத்தது. லேட்டஸ்டாக ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் ஷில்பாவைத் தேடி வந்துள்ளது.

இந்த நிலையில் கருப்புத் தோல் அழகி ஷில்பாவின் நடனம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் பாலிவுட் என்கிற இசை நிகழ்ச்சி ஜெர்மனியில் அரங்கேறவுள்ளது.

பாம்பே ட்ரீம்ஸ், மாலின் ராக் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளின் வடிவில் இந்த மிஸ் பாலிவுட் இசை நிகழ்ச்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மிஸ் பாலிவுட் குறித்து ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் டேல் பக்வாகர் கூறுகையில், நாடு 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஷில்பாவின் மிஸ் பாலிவுட் இசை நிகழ்ச்சி, இந்தியாவின் கலாச்சாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமையும்.

கடந்த இரண்டு மாதங்களாகவே இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாலிவுட்டின் கலாச்சரத்தையும் மேலை நாடுகளுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வருகிறார் ஷில்பா என்றார்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு கணேஷ் ஹெக்டே என்பவர் நடனம் அமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஆட மட்டுமே செய்வாராம். பாட மாட்டாராம்.

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஏற்கனவே தொடங்கி விட்டது. ஷில்பா இதில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஷில்பா அணியவுள்ள உடைகளை நீத்து லல்லா வடிவமைத்துள்ளார்.

ஜெர்மனியில் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படும். அதன் பின்னர் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது நடைபெறவுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil