twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கிலோ தங்கத்தை மோசடி செய்தோமா..? என்ன நடந்தது..? நடிகை ஷில்பா ஷெட்டி திடீர் விளக்கம்!

    By
    |

    மும்பை: தன் மீதும் தனது கணவர் மீதும் கூறப்பட்டுள்ள தங்க திட்ட மோசடி புகார் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழில், மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தவர், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி.

    பிறகு விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவரது கணவர், ராஜ் குந்த்ரா. இவர் தொழிலதிபர்.

    செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!செட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா!

    தங்கத்துக்கான அட்டை

    தங்கத்துக்கான அட்டை

    ஷில்பா ஷெட்டியும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும் சத்யுக் என்ற தங்கம் வர்த்தக நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு ரூ.18 லட்சத்து 58 ஆயிரத்துக்கு சுமார் ஒரு கிலோ தங்கத்துக்கான திட்டத்தில் இணைந்திருந்தார்.

    தங்கம் வாங்குவதற்காக

    தங்கம் வாங்குவதற்காக

    இந்த திட்டம் ஐந்து வருடத்துக்கானது. 5 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு அந்த ஒரு கிலோ தங்கம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஐந்து ஆண்டு முடிவடைந்த நிலையில், தங்கத்தை வாங்குவதற்காக, மும்பையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சச்சின் ஜோஷி சென்ற போது அலுவலகம் மூடப்பட்டு இருந்தது.

    ராஜினாமா

    ராஜினாமா

    அவர் விசாரித்தபோது, அந்த தங்க நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை நடிகை ஷில்பாவும் ராஜ் குந்த்ராவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜினாமா செய்தது தெரிய வந்தது. இது சச்சின் ஜோஷிக்கு ஏமாற்றத்தை தந்தது. இதை தாங்க முடியாத சச்சின் ஜோஷி, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை கர் போலீசில் புகார் அளித்தார்.

    ஆதாரமற்றவை

    ஆதாரமற்றவை

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, சச்சின் ஜோஷியின் அந்தப் புகாரை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்த ஷில்பா ஷெட்டி, சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை என்று இப்போது கூறியுள்ளார்.

    சட்டபூர்வ கட்டணம்

    சட்டபூர்வ கட்டணம்

    இதுபற்றி அவர் கூறும்போது, சச்சின் ஜோஷியின் தங்கத்தை நாங்கள் டெபாசிட் செய்திருக்கிறோம். அதற்கான சுணக்கக் கட்டணத்தை (demurrage charges) அவர் இன்னும் செலுத்தவில்லை. இது சட்டபூர்வமான கட்டணம் மட்டுமே.

    Recommended Video

    Bigg Boss 4 Rules & Regulation | Contestants Quarantine • Kamal Hassan
    மோசடி வழக்கு

    மோசடி வழக்கு

    அவருக்கு எதிராக, காசோலை மோசடி வழக்கை தொடுத்துள்ளோம் என்பது பலருக்குத் தெரியாது. அவரிடம் தங்கத்தைத் தர எங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீதிமன்றத்தில் அதை ஒப்படைத்திருக்க மாட்டோம். இதில் மத்தியஸ்தம் பேச நீதிமன்றம் ஒருவரை நியமித்திருக்கிறது. உண்மையில் விரைவில் வெளிவரும் என்று ஷில்பா கூறியுள்ளார்.

    English summary
    Shilpa Shetty addresses cheating allegations against her, husband Raj Kundra: ‘Truth will be out soon’
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X