முகத்தை மறைத்த படி சுற்றி வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர்... இது தான் காரணமா ?

மும்பை : நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீப காலமாக முகத்தை முழுவதும் மறைத்தபடியே பொது இடங்களில் சுற்றி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி, தற்போது வரை பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். 2009 ம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம், ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். ஆபாச வீடியோ எடுத்து, அதை ஹாட்ஷாட்ஸ் மொபைல் ஆப் மூலம் சப்ஸ்கிரைபர்களுக்கு பகிர்ந்ததாக ராஜ் குந்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ராஜ் குந்த்ரா, செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.

கணவரை பிரிகிறாரா ஷில்பா

கணவரை பிரிகிறாரா ஷில்பா

ராஜ் குந்த்ரா தற்போது வரை தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார். தவறுதலாக தான் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பொது இடங்களில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார் ராஜ் குந்த்ரா. ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் ஒரே இடத்திற்கு சென்றாலும், இருவரும் சேர்ந்து செல்லாமல் தனித்தனி கார்களிலேயே செல்கிறார்கள். இதனால் ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் வதந்தி பரவியது.

முகத்தை மறைத்தபடி வரும் ராஜ் குந்த்ரா

முகத்தை மறைத்தபடி வரும் ராஜ் குந்த்ரா

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெளியில் வரும் போதெல்லாம் தனது முகத்தை முழுவதுமாக மறைத்தபடி இருக்கும் மாஸ்கை அணிந்து கொண்டே சுற்றி வருகிறார் ராஜ் குந்த்ரா. சட்டையுடன் சேர்ந்தே இருப்பது போன்ற இந்த மாஸ்க், ராஜ் குந்த்ராவின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட ராஜ் குந்த்ராவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இவர் தான் அடுத்த ஸ்பைடர் மேனா

இவர் தான் அடுத்த ஸ்பைடர் மேனா

இவர் என்ன அடுத்த ஜெனரேசன் ஸ்பைடர் மேனா. கொரோனாவில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு ஏற்பாடா. மும்பையில் அடிக்கும் வெயிலுக்கு இதை எப்படி போட்டுக் கொண்டு அலைகிறார். முகத்தை மறைத்துக் கொண்டால் மட்டும் நடந்த அனைத்தையும் மறைத்து விட முடியுமா என கண்டபடி கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முகத்தை மறைக்க இதுதான் காரணமா

முகத்தை மறைக்க இதுதான் காரணமா

ராஜ் குந்த்ரா எதற்காக முகத்தை முழுவதும் மறைத்தபடி, வித்தியாசமான மாஸ்க் அணிந்து கொண்டு சுற்றுகிறார் என விசாரித்த போது, கேமிராக்களிடம் இருந்து தப்பிக்கத்தான் இந்த ஏற்பாடாம். மீடியாக்களின் கேமிராக்களிடம் தப்பிப்பதற்காக மட்டும் தான் இந்த ஏற்பாடாம். ஆனால் சமீபத்தில் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட போது முதல் முறையாக மாஸ்க் இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார் ராஜ் குந்த்ரா. இதையும் நெட்டிசன்கள் செமயாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X