twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பைக்கு எதிராக கருத்துக் கூறுவதா? நடிகை கங்கனாவின் உருவ பொம்பை எரிப்பு.. சிவசேனா போராட்டம்!

    By
    |

    மும்பை: மும்பைக்கு எதிராக கருத்துக் கூறியதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் நடிகை கங்கனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Recommended Video

    Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply

    கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் அவர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

    அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

     போயஸ் கார்டன் தெருவில் படு வேகமாக நடந்து போறாரே.. அது யாரு.. ரஜினியா.. வைரல் வீடியோ! போயஸ் கார்டன் தெருவில் படு வேகமாக நடந்து போறாரே.. அது யாரு.. ரஜினியா.. வைரல் வீடியோ!

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    இந்நிலையில் சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனவத் கூறி வருகிறார். பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், மகேஷ் பட் உள்பட பலர் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஒருவர், கங்கனா
    உள்ளிட்ட சிலரின் பெயர்களைக் குறிப்பிடாமல் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்திருந்தார்.

    மும்பை காவல்துறை

    மும்பை காவல்துறை

    இந்த கருத்தை மும்பை காவல் துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் லைக் செய்திருந்தது. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த கங்கனா 'சுஷாந்தின் கொலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை, அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்திருக்கிறது. இதைவிட மோசமாக மும்பை காவல் துறை இறங்கிவிட முடியாது என்று கூறியுள்ளார்.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    ஆக்கிரமிப்பு காஷ்மீர்

    இதையடுத்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கட்சியின் எம்.பி,சஞ்சய் ராவத், மும்பையில் வசித்து கொண்டு மும்பை போலீசார் மீது விரல்களை உயர்த்தியதால் அவரது துரோகம் வெட்கக்கேடானது என்று கூறி இருந்தார். இதனால், கங்கனா, சஞ்சய் ராவத் தன்னை மிரட்டியதாகக் குற்றம் சாட்டி இருந்தார். மும்பையை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் போலவே கருதுகிறேன் என்றும் கூறினார்.

    அனில் தேஷ்முக்

    அனில் தேஷ்முக்

    இதுதொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை போலீசை ஸ்காட்லாந்து யார்டுடன் ஒப்பிடலாம். மும்பை போலீசாரை குற்றம்சாட்டும் கங்கனா, மும்பையிலோ அல்லது மகாராஷ்டிராவிலோ வாழ உரிமை இல்லை என்றார். இதற்கு பதிலளித்த கங்கனா, என் ஜனநாயக உரிமை மீது அவர் முடிவுகளை எடுக்கிறார். ஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தாலிபானுக்கு சென்றுவிட்டது, மும்பை' என்றார்.

    உருவப் பொம்மை எரிப்பு

    உருவப் பொம்மை எரிப்பு

    பின்னர், மும்பைக்கு வரக் கூடாது என பலர் மிரட்டுகின்றனர். வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு செல்வேன். முடிந்தால் தடுக்கட்டும் என கூறியுள்ளார். இதற்கிடையே அவருக்கு எதிராக மும்பையின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா கட்சியின் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர் உருவப் பொம்மையையும் எரித்தனர். மகாராஷ்ட்ராவின் நாசிக், தானே, பால்கர், அவுரங்காபாத் உள்பட பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    English summary
    Shiv Sena activists on Friday held protests against Bollywood actress Kangana Ranaut over her recent remarks targeted at Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X