»   »  மே மாதமே சிவாஜி!

மே மாதமே சிவாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படம் கண்டிப்பாக தள்ளிப் போடப்பட மாட்டாது, மே மாதமே படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் கூறியுள்ளார்.

கண்களையும், காதுகளையும் ரெடி செய்து கொண்டு சிவாஜியை ரசிக்க காத்திருக்கும் கோடானு கோடி ரசிகர்களுக்கும், தலைவர் படம் எப்ப வரும், எப்படிக் கொண்டாடலாம் என்ற தவிப்புடன் உள்ளனர்.

சிவாஜி பட ரிலீஸ் தேதி குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. மே 17ம் தேதி படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தள்ளிப் போகும் என திடீரென செய்தி கிளம்பியது.

இந்த நிலையில் மே 26ம் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸாகி விடும், அதற்கு மேல் தாண்டாது என்று ஏவி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏவி.எம்.சரவணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மே மாத கடைசி வாரத்தில் படத்தைத் திரையிட திட்டமிட்டுள்ளோம். இயக்குநர் ஷங்கரும், அவரது குழுவினரும் விரைவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வேலைகள் முடியும் தருவாயை எட்டி விட்டன என்றார்.

சிவாஜி படத்தை ரசிகர்களை விட அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளாராம் ரஜினி. காரணம், இது தமிழில் அவருக்கு 100வது படம். இதுவரை 173 படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் கூட தமிழில் அவருக்கு சிவாஜிதான் 100வது படம்.

இதனால் 100வது தமிழ்ப் படத்தின் வெற்றியை அவர் எதிர்பார்த்திருக்கிறார். நியாயமான எதிர்பார்ப்புதானே.

இதற்கிடையே, சிவாஜிக்கான விளம்பரங்கள் அமர்க்களப்படுத்த ஆரம்பித்து விட்டன. சென்னை நகரில் ஆங்காங்கே வினைல் போர்டில் வடிவமைக்கப்பட்ட விளம்பர போர்டுகள் பளிச்சிட ஆரம்பித்துள்ளன.

ஜெமினி (அண்ணா) மேம்பாலம் அருகே அண்ணா சாலை சந்திப்பில் சூப்பரான ஒரு விளம்பரப் பலகை பளிச்சிட ஆரம்பித்துள்ளது. கண்ணைப் பறிக்கும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் பிரவுன் நிற பிளேசருடன், படு லுக்கான கூலிங் கிளாஸில் சூப்பர் ஸ்டார் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

கொளுத்தும் வெயிலில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது இந்த விளம்பர போர்டு. அந்தப் பக்கம் போகிறவர்கள், ஒரு நிமிடம் நின்று இதைப் பார்க்காமல் போவதில்லை.

கோலிவுட்டின் பாஷாவாச்சே, பார்க்காமல் போக முடியுமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil