»   »  சிவாஜி கதை சுடப்பட்டதா?:ஏவி.எம், ஷங்கருக்கு நோட்டீஸ்

சிவாஜி கதை சுடப்பட்டதா?:ஏவி.எம், ஷங்கருக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் கதை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் படத்தைத் தயாரித்த ஏவி.எம், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், சிவாஜி படத்தின் கதை என்னுடையது. இந்தக் கதையை சென்னையைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் கேட்டார். ஆனால் எனக்குத் தெரியாமல் இயக்குநர் ஷங்கரிடம் மேலாளராகப் பணியாற்றி வருபவரிடம் இக்கதையைக் கொடுத்து விட்டார்.

இந்தக் கதையை தெலுங்கில் படமாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்படிச் செய்ய வேண்டாம் என ராமதாஸ் என்னிடம் கூறினார். மேலும் ஷங்கரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறினார். ஆனால் அதன் பின்னர் என்னால் அவரை பார்க்கவே முடியவில்லை.

இந்த நிலையில்தான் சிவாஜி படம் வெளியானது. அந்தப் படத்தைப் பார்த்த நான் அக்கதை, எனது கதை என்பதை அறிய வந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எனது அனுமதி இல்லாமல் எனது கதையைப் பயன்படுத்தி சிவாஜி படம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவே படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை 4வது நீதிமன்ற நீதிபதி விஜயேந்திர ராணி விசாரித்தார். ஏவி.எம் நிறுவனம், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டிருந்தார். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை 26ம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிபதி அதற்குள் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil