»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராயப்பேட்டை பெனிபிட் பன்ட் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றிருந்த நடிகர்சிவாஜி கணேசன் ஒன்றரை கோடி ரூபாயை திருப்பி செலுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் பல தனியார் நிதி நிறுவனங்கள் தொடங்கி நடந்துவந்தன.அவைகள் அதிக வட்டிகள் தருவதாக கூறியதால், பொதுமக்கள் பெருமளவில்அவைகளில் முதலீடு செய்து வந்தனர்.

ஆனால் முதலீடு முதிர்ச்சியடைந்த பின்னும் அந்த நிறுவனங்கள்வாடிக்கையாைளர்களுக்கு பணத்தை தரவில்லை. பெரும்பாலான நிதி நிறுவனங்கள்மூடபப்ட்டு அதன் உரிமையாளர்களும் தலைமறைவாகி இருந்தனர்

பணம் கட்டி ஏமாந்த பொதுமக்களுக்கு பணத்தைத் திரும்ப பெற்றுத் தர முயற்சிகள்எடுக்கப்பட்டு வருகிண்றன.

இந்த நிலையில் ஆர்.பி.எப். நிதி நிறுவனத்தில், பல நடிகர்களும் பெரும் புள்ளிகளும்பணம் கடனாகப் பெற்று திருப்பி தராமல் இருந்து வந்தனர். தற்போது, அவர்களில்நடிகர் சிவாஜிகணேசன் 1.5 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளார்.அவர் இன்னும் 65 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil