»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சிவாஜிகணேசன் (74) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சிவாஜி கணேசனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இதயம் சீராக இயங்குவதற்காக அவருக்கு பேஸ் மேக்கர் கருவிபொருத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்த நிலையில் சிவாஜி கணேசன் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிவாஜி கணேசனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும், அவரை சில தினங்கள் ஓய்வு எடுக்குமாறு கூறியிருப்பதாகவும்தெரிவித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிவாஜி கணேசனை பார்க்க யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை.

Read more about: actor chennai hospital shivaji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil