»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கடந்த வாரம், அமெரிக்காவுக்கு ஒரு மாதம் சுற்றுப்பயணமாக கிளம்பிச் சென்றார் சிவாஜி கணேசன். அவருடன் அவரது மனைவி கமலாஅம்மாவும் சென்றார்.

அமெரிக்காவில் உள்ள சிவாஜி கணேசனின் உறவினர்கள் வீட்டிற்கு இருவரும் செல்கின்றனர். சிவாஜி கணேசனுக்கு வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி73-வது பிறந்த நாள்.

தனது பிறந்த நாளை நண்பர்களுடன் அமெரிக்காவிலேயே கொண்டாட இருக்கிறார் சிவாஜி கணேசன். பிட்ஸ் பர்க் என்ற இடத்தில் பிறந்த நாளைக்கொண்டாடுகிறார் சிவாஜி.

அமெரிக்காவில் பல இடங்களையும் சுற்றிப்பார்க்கும் சிவாஜி கணேசன், அமெரிக்க அதிபர் கிளிண்டன் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையையும் சுற்றிப்பார்க்க இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil