»   »  ராகவா லாரன்ஸ்-ரித்திகா சிங்கின் 'சிவலிங்கா' பூஜையுடன் தொடங்கியது!

ராகவா லாரன்ஸ்-ரித்திகா சிங்கின் 'சிவலிங்கா' பூஜையுடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்-ரித்திகா சிங் நடிக்கவிருக்கும் 'சிவலிங்கா' திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

கன்னடத்தில் புனித் ராஜ்குமார்-வேதிகா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் 'சிவலிங்கா'. பி.வாசு இயக்கியிருந்த இப்படத்தில் அவரது மகன் சக்தி வாசுவும் முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.


'சிவலிங்கா'வை தமிழில் 'சந்திரமுகி-2' வாக ரஜினியை வைத்து இயக்க நினைத்த வாசுவின் ஆசை நிறைவேறவில்லை. இதனால் லாரன்ஸை நாயகனாக வைத்து இப்படத்தை இயக்கத் திட்டமிட்டார்.


Shivalinga Starts with Pooja

லாரன்ஸுக்கு ஜோடியாக ரித்திகா சிங்கையும்,காமெடியனாக வடிவேலுவையும் படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.


பூஜையில் லாரன்ஸ், பானுப்ரியா, பி.வாசு, சக்தி வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். கன்னடத்தைப் போலவே தமிழிலும் இப்படத்துக்கு 'சிவலிங்கா' என்றே தலைப்பு வைத்துள்ளனர்.


விரைவில் இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த முழு விவரங்களையும், படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Shivalinga Starts with Pooja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil