சிங்கப்பெண்ணாய் கண்ணீருடன் விடைபெற்ற ஷிவானி.. முதல் ஆளாய் கட்டியணைத்து கலங்கிய பாலாஜி!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் நிகழ்ச்சயின் கடைசி எவிக்ஷன் என்பதால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

இதில் சோம் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்றதால் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றார்.

மூன்று மகளிரில் ஒருவர்

மூன்று மகளிரில் ஒருவர்

அவரை தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்ட முதல் ஆளாக ஆரி தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இரண்டாவது நபராக பாலாஜி காப்பாற்றப்பட்டார். அவரை தொடர்ந்து ரியோவை காப்பாற்றிய கமல், மூன்று மகளிரில் ஒருவர் வெளியேறுவதாக கூறினார்.

அறிவித்த கமல்..

அறிவித்த கமல்..

அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டார். ஷிவானியா கேபியா என்ற நிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் யார் இருக்க வேண்டும் என்று கேட்டார் கமல். அதற்கு ஹவுஸ் வாயே திறக்காததால் கடுப்பான கமல், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது எனக் கூறி ஷிவானியின் பெயரை அறிவித்தார்.

கட்டியணைத்த பாலாஜி

கட்டியணைத்த பாலாஜி

எவிக்ஷன் கார்டில் தனது பெயரை பார்த்ததுமே கண்கள் கலங்கினார் ஷிவானி. பின்னர் இதோ வருகிறேன் என்பதை போல் எழுந்து நின்றார் ஷிவானி. அவரை முதல் நபராக வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பாலாஜி.

மரியாதை வச்சுருக்கேன்

மரியாதை வச்சுருக்கேன்

பின்னர் கேபி, ரம்யா, ஆரி, சோம், ரியோ என அனைவரும் கட்டியணைத்து அவருக்கு ஆறுதல் கூறினர். ஷிவானியிடம் பேசிய பாலாஜி, உன்னை நினைச்சு நான் பெருமை படுகிறேன் என்றார். மேலும் கனத்த இதயத்துடன் சொல்கிறேன் உன் மேல் நிறைய மரியாதை வச்சுருக்கேன் என்றார்.

சிங்கப் பெண் பாடல்

சிங்கப் பெண் பாடல்

பின்னர் தனது உண்டியலை உடைத்து எல்லோருக்கும் காயின்களை பிரித்துக்கொடுத்தார் ஷிவானி. ஷிவானிக்கு சிங்கப்பெண்ணே பாடலை பாடி பிரியா விடை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். பிக்பாஸ் வீட்டில் பூத்த பூக்களையும் பறித்து கொடுத்து பரிசு அளித்தனர்.

பிக்பாஸ் ரைமிங்

பிக்பாஸ் ரைமிங்

அதனை தொடர்ந்து ரைமிங்காக இங்க உங்களுக்கு நடந்ததெல்லாம் டெஸ்ட்.. வெளியே நடக்கப் போறதுக்கு ஆல் த பெஸ்ட் என்று ஷிவானி ஸ்டைலில் கூறினார் பிக்பாஸ். இதனைக் கேட்டு ஹேப்பியான ஷிவானி, நன்றி கூறி கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாய் வெளியேறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X