For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆரி மேல ரம்யாவுக்கு அப்படி என்ன வெறுப்பு.. சாஃப்ட் ஹர்ட் பற்றி கேட்டு அசிங்கப்படுத்திய ஷிவானி!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற யாரை தேர்வு செய்வீங்கன்னு ரம்யாவிடம் ஷிவானி கேட்டதற்கு, ஆரி மற்றும் ஆஜீத் என சொன்னார் ரம்யா பாண்டியன்.

  இன்னொரு மொக்கை கால் டாஸ்க்காகவே ஷிவானி, ரம்யா டாஸ்க் சென்றது.

  தன்னை அப்படி ரம்யா டீஸ் பண்ணுவது பற்றி ஒரு கேள்வியும் கேட்காமல், ரம்யா மூலம் மற்றவர்களை காலி பண்ணும் நோக்கிலேயே ஷிவானி பேசினார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  அந்த வாய்ஸ் என் வாய்ஸ் இல்லை.. அதிரடியாக மறுத்த கவின்.. அப்போ மீம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா!

  ஒருவழியா முடிஞ்சிடுச்சு

  ஒருவழியா முடிஞ்சிடுச்சு

  நிவர் புயலே முடிஞ்சு அடுத்து புரேவி புயல் வந்து விட்டது. இன்னும் பிக் பாஸ் வீட்டில் போன வாரம் தொடங்கிய ஒய் பிளட் சேம் பிளட் டாஸ்க் முடியாமல் ஜவ்வு போல இழுத்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழியா இன்றைக்கு ரியோ மற்றும் அனிதாவின் காலுடன் முடிந்தது. அதற்கு முன்னதாக ரம்யா மற்றும் ஷிவானியின் மொக்கை கால் ஒன்றும் இருந்தது.

  பேச தெரியல

  பேச தெரியல

  சின்னப் பொண்ணு ஷிவானி நாராயணனுக்கு பேசவே தெரியல என்பது இன்றைய போன் கால் டாஸ்க்கிலும் நல்லா தெளிவாகவே தெரிந்தது. ரம்யா பாண்டியன், நீங்க கிச்சன்ல வெட்டுறது ஆனியன் என மொக்கை ஜோக் எல்லாம் சொல்லி விட்டு ஒழுங்கா பேசாமல், சிரித்துக் கொண்டே இருவரும் ரசிகர்களை கடுப்பேற்றினார்கள்.

  சாஃப்ட் ஹர்ட்

  சாஃப்ட் ஹர்ட்

  ரம்யா பாண்டியனிடம் உங்களை ஏன் எல்லாரும் சாஃப்ட் ஹர்ட்னு சொல்றாங்க, நீங்க ஏன் பதில் சொல்லும் போது சிரிச்சிகிட்டே பேசுறீங்க என்று ஷிவானியும் சிரித்துக் கொண்டே கேட்டது சாஃப்ட் கேள்வியாகவே ரம்யாவுக்கு மாற, அவர் ஈஸியாக நான் என்னோட பாயின்ட்டை எடுத்து வைக்கும் போதும் மத்தவங்களை ஹர்ட் பண்ணி சண்டை வர வைக்கக் கூடாது எனும் நோக்கில் அப்படி பண்றேன் என்றார்.

  யார் வெளியா போகணும்

  யார் வெளியா போகணும்

  இந்த பிக் பாஸ் வீட்டில இருந்து எந்த இரண்டு பேரை வீட்டுக்கு போக நாமினேட் பண்ணுவீங்க என ஷிவானி கேட்டதும், ஆரி மற்றும் ஆஜீத்தின் பெயர்களை ரம்யா பாண்டியன் பட்டென சொன்னார். ஆஜீத்தை தம்பி, தம்பின்னு சொன்னாலும், முதல்ல அவனை கிளப்பவே குறியாக இருக்கிறார் ரம்யா. ஆரி மேலயும் என்ன காண்டு என்று தெரியவில்லை.

  ஃபைனலுக்கு யார் போவா?

  ஃபைனலுக்கு யார் போவா?

  மேலும், ரம்யாவிடம் ஃபைனலுக்கு யார் போவான்னு நினைக்கிறீங்க என்ற கேள்வியை ஷிவனை எழுப்பியதும், நான், ஷிவானி, பாலா மற்றும் ரியோ ஃபைனலுக்கு போவாங்கன்னு நினைக்கிறேன் என்றார். அர்ச்சனா, கேபி, நிஷா, அனிதா, சனம், ரமேஷ், சோம் எல்லாம் சீக்கிரமே அவுட்டாகி வெளியேறிடுவாங்க என்பது ரம்யாவின் எண்ணம் என்பது தெரிகிறது.

  கெஞ்சிய ரம்யா

  கெஞ்சிய ரம்யா

  எப்படி ஜித்தன் ரமேஷிடம் கெஞ்சி போனை கட் பண்ண வைத்தாரோ, அதே போல, ஷிவானி நாராயணனிடமும் கெஞ்சி போனை வைக்க செய்து விட்டார். திறமையாக பேசி ஜெயிக்க முடியால, பிசிக்கல் டாஸ்க் கொடுத்தாலும் தோல்வி, ஓசியில முதல் தடவையா கேப்டன் ஆகிட்டு, அப்படியே தான் ரொம்ப டேலன்ட், டைட்டில் வின்னர் என சீன் போட்டுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறார் ரம்யா என்றும் ரசிகர்கள் ஷோவை பார்த்து விட்டு திட்டி வருகின்றனர்.

  English summary
  Ramya Pandian begging Shivani to came to nomination and won the customer care task in a cunning way.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X