சிங்கப்பெண்.. ஷிவானியா? ரம்யாவா? இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி அடிச்சிக்கிறாங்களே.. புரமோ 3!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணனுக்கும், ரம்யா பாண்டியனுக்கும் இடையே கடுமையான போட்டி வலுத்து வருகிறது.

சிங்கப்பெண்ணே பேக்ரவுண்ட் பிஜிஎம் போட்டு பிக் பாஸ் எடிட்டர் 3வது புரமோவை செதுக்கி உள்ளார். நிச்சயம் இந்த புரமோவை பார்த்தால் ஷிவானியின் அம்மா சந்தோஷப்படுவார்.

மற்றவர்கள் அவுட்

மற்றவர்கள் அவுட்

மூன்றாவது புரமோவின் முதல் ஷாட்டிலேயே இந்த கடைசி சுற்றில் ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் கேபி அவுட் ஆகி வெளியேறி இருப்பது தெரிகிறது. கடைசி வரை போராடும் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனுக்கு ஹவுஸ்மேட்கள் ராயல் சல்யூட் அடித்தது போலவே பிக் பாஸ் ரசிகர்களும் சல்யூட் செய்து வருகின்றனர்.

சிங்கப்பெண்ணே சாங்

சிங்கப்பெண்ணே சாங்

ஷிவானி நாராயணனும், ரம்யா பாண்டியனும் கடைசி வரை கயிற்றை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிக்கு உடனே பிக் பாஸ் எடிட்டர் பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலை பிஜிஎம்மாக போட்டுள்ளார். நிச்சயம் இது நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை என்றாலும், புரமோவை வலு சேர்த்து வைரலாக்கி வருகிறது.

செம டஃப்

செம டஃப்

ரம்யாவிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என கடைசி வரை ஷிவானி செம டஃப் கொடுத்து வருகிறார். இதில், யார் வெற்றி பெற்று அதிக புள்ளிகளை பெறுவார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும். இருவரும் கடும் போட்டி போட்டு வருகிறார்கள் என்பது மட்டும் இந்த புரமோ மூலம் தெரிகிறது.

செவுல்லயே அடி

செவுல்லயே அடி

போதா குறைக்கு கயிற்றை விட வைக்க அருகே வைக்கப்பட்டுள்ள கூடையில் இருந்து பந்தை எடுத்து எறிய ஆரம்பிக்கின்றனர் இருவரும். ஷிவானிக்கு செவுல்லயே அடி கொடுக்கும் ரம்யா பாண்டியன் இந்த சுற்றில் ஜெயிக்கிறாரா? இல்லை அதை பொறுத்துக் கொண்டு திருப்பி அடிகொடுத்து ரம்யாவை வெளியேற்றுவாரா ஷிவானி என வெயிட் பண்ணி பார்ப்போம்.

பார்க்க நல்லாருக்கு

பார்க்க நல்லாருக்கு

மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஷிவானி என இத்தனை நாட்களாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது தொடர்ந்து எல்லா டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிலும் தனியாக ஷிவானி சிறப்பாக கேம் ஆடி தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி வருவது பார்க்க நல்லா இருக்கு.

Recommended Video

Azhagiya Tamil Magal Serialல இருந்து வெளியேற காரணம் | Actress Sheela Chat Part-02 | Filmibeat Tamil
இந்த வாரம்

இந்த வாரம்

இந்த இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். எப்படியோ நாளைக்கு காலையிலேயே இந்த வாரம் சிங்கிள் எவிக்‌ஷனா? டபுள் எவிக்‌ஷனா? யார் வெளியே போனாங்கன்னு எல்லாமே லீக் ஆகிடும், அடுத்த வாரம் ஷோவும் சிறப்பாக முடிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X