‘ஆர்டிக்கிள் 15 ‘ ரீமேக் படத்தில் இணையும் தெலுங்கு நடிகரின் மகள் ஷிவானி !
சென்னை : ஆர்டிக்கிள் 15 படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் சிவானி ராஜசேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹிப்ஹாப் ஆதியுடன் அன்பறிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் ரீமேக்
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆர்டிக்கிள் 15 வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர் இஷா தல்வார், மனோஸ் பாவ்லா உள்ளிட்டோர் லீட்ரோலில் நடித்திருந்தனர்.

ஆர்டிக்கிள்15
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் . இவர், கண்னை நம்பதே, ஏஞ்சல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பொள்ளாச்சியில்
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், நடிகர் ஆரியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடிந்து முடிந்த நிலையில், ஊரடங்கு முடிந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ரீல் ரோல்
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஹிப்ஹாப் ஆதியுடன் அன்பறிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











