ஜெயில் இன்னும் வரல.. வாழைப்பழ பெட் கொடுமை.. சுவாரஸ்யமில்லாத போட்டியாளர் லிஸ்டிலும் ஷிவின்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் கமல் வீட்டை சுற்றிக் காட்டும் போதே ஜெயில் செட் எப்படி வித்தியாசப்பட்டு இருக்கிறது என்பதையும் காட்டி விடுவார்.

ஆனால், இந்த முறை இன்னமும் அந்த வெளியே வைக்கப்பட்டு இருந்த கூண்டு ஜெயில் இன்னமும் ரெடியாகி உள்ளே வரவில்லை.

இந்நிலையில், அதற்கு பதிலாக வாழைப்பழ பெட்டில் வெளியே படுக்கும் சித்ரவதை போட்டியாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயிலுக்கு பதில்

ஜெயிலுக்கு பதில்

மற்ற போட்டியாளர்கள் சொகுசாக ஏசி ரூமில் உள்ள பெட்டில் படுத்துக் கொள்ளும் நிலையில், முதல் நாளில் இருந்தே சுவாரஸ்யம் குறைவாக உள்ள போட்டியாளர்கள் என சிலர் அடையாளப்படுத்தப்பட்டு வாழைப்பழ படுக்கையில் படுக்க அனுப்பப்பட்டனர். விக்ரமன், சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் அதில் படுத்த அனுபவத்தை கமல்ஹாசன் முன்பாக பகிர்ந்து கொண்டனர்.

லீஸ்ட் இண்ட்ரஸ்டிங்

லீஸ்ட் இண்ட்ரஸ்டிங்

ஆரம்பத்திலேயே உங்களை ஜட்ஜ் பண்ணிட்டாங்க.. அதை பற்றி பெரிதாக யோசிக்க வேண்டாம், இப்போ நீங்க சொல்லுங்க இந்த ஒருவார பர்ஃபார்மன்ஸுக்கு பிறகு யாரெல்லாம் லீஸ்ட் இன்ட்ரஸ்டிங் போட்டியாளர் என கமல் கொளுத்திப் போட விக்ரமன் - ஷெரினா மற்றும் அசல் கோளாறு பெயர்களை சொன்னார்.

பாவம் ராம்

பாவம் ராம்

சிங்கப்பூர் மாடல் அழகியான நிவாஷினி ராம் ராமசாமி மற்றும் அசீம் பெயர்களை சொன்னார். தொடர்ந்து ஆட்டு மந்தைகளை போல அடுத்தடுத்த போட்டியாளர்களும் ராமின் பெயரை சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே ராம் வாழைப்பழ பெட்டில் அனுபவித்தது போதும் என இருக்கும் நிலையில், மீண்டும் வசமாக மாட்டி உள்ளார்.

ஷிவினும் சிக்கினார்

ஷிவினும் சிக்கினார்

குயின்ஸி ஷிவின் மற்றும் ராம் என இருவரும் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்கள் என ஒரே போடாக போட்டார். அதன் பின்னர் பேசிய ஜனனி விக்ரமன் மற்றும் ஷிவின் பெயரை சொல்ல, ராம் உடன் சேர்ந்து லீஸ்ட் இன்ட்ரஸ்டிங் போட்டியாளர் என்கிற பட்டமும் ஷிவினுக்கு கிடைத்தது.

ஒதுக்குறாங்க

ஒதுக்குறாங்க

திருநங்கை போட்டியாளர் என்பதாலே ஷிவினை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஒதுக்கப் பார்க்கின்றனர் என பிக் பாஸ் ரசிகர்கள் ஷிவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அடுத்த வார நாமினேஷனில் கண்டிப்பாக இந்த பிரச்சனை எதிரொலிக்கும், பலரும் ஷிவின் பெயரை சொல்லி நாமினேட் செய்யட்டும், அப்போது தான் ஷிவினுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு பலம் இருக்கிறது என்பது போட்டியாளர்களுக்கு புரிய வரும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X