சண்டையே வேண்டாம்.. ஷிவினுக்கு கொடுங்க பிக் பாஸ் டைட்டிலை.. திடிரென டிரெண்டாகும் ஹாஷ்டேக்!
சென்னை: விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் இடையே மிகப்பெரிய ஆதரவு வெளி உலகில் கிடைத்து வரும் நிலையில், அந்த இருவருக்கும் வேண்டாம் ஷிவினுக்கு இந்த முறை டைட்டிலை கொடுத்துடுங்க கமல் சார் என ஷிவின் ரசிகர்கள் #Shivin ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பண மூட்டை எடுத்துக் கொண்டு கதிர் கிளம்பிய நிலையில், அடுத்து பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையிலும் ஷிவின் அதை சீண்டவே இல்லை.
13 லட்சம் பணத்தை பார்த்ததும் டிக்கெட் டு ஃபினாலே வென்ற அமுதவாணனே அதை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.

ஷிவின் சிறப்பு
இந்த சீசனில் பெஸ்ட் ஃபைண்டிங் என்றால் அது ஷிவின் தான் என பிக் பாஸ் விமர்சகர்கள் பலர் மற்றும் ரசிகர்களும் கூறி உள்ளனர். கேமில் இறங்கி ஆடுவதிலும், ஒவ்வொருத்தருடனும் கருத்து மோதலில் ஈடுபடுவதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஷிவின். இறுதிப்போட்டியாளராக மாறி உள்ள ஷிவின் இந்த டைட்டிலை வெல்வாரா மாட்டாரா என்கிற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

டைட்டில் வின்னர் யாரு
கடைசி வாரத்தில் அடியெடுத்து வைத்த கதிர் மற்றும் அமுதவாணன் இருவரும் பணத்துடன் உஷாராக வெளியேறிய நிலையில், மைனா நந்தினி, ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட 4 பேர் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், இதில், யாருக்கு டைட்டில் கிடைக்கப் போகுது என்பது நாளை ஷூட்டிங் முடிந்ததும் லீக் ஆகிவிடும்.

விக்ரமன் vs அசீம்
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் தங்கள் கடமை முடிந்து விட்டது இனிமேல் வெளியே இருப்பவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கையில் வெளியே விக்ரமன் vs அசீம் ஆர்மியினர் பெரிய சண்டையை போட்டு வருகின்றனர். இருவரில் ஒருவருக்குத்தான் டைட்டில் கன்ஃபார்ம் என்பது போல முடிவு கட்டி உள்ளனர்.

ஷிவினுக்கும் தகுதி இருக்கு
இந்த இருவரை விட ஷிவினுக்கு பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்ல அதிக தகுதிகள் இருப்பதாக ஷிவின் ரசிகர்களும் #Shivin ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் வெற்றி மேடையில் ஷிவின் ஏறியபோது பிக் பாஸ் அவருக்கு சொன்ன வார்த்தைகளை பதிவிட்டு ஷிவின் இனி ஓடி ஒளிய தேவையில்லை அவர் தான் டைட்டில் வின்னர் என சப்போர்ட் செய்து வருகின்றனர்.

வரலாறு படைப்பாரா ஷிவின்
பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது சீசனில் மட்டும் ரித்விகா டைட்டிலை வென்று இருந்தார். ஆனால், அதன் பிறகு ஒரு பெண் போட்டியாளர்கள் கூட டைட்டிலை வெல்ல வில்லை. தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் வென்று வரும் நிலையில், திருநங்கை போட்டியாளரான ஷிவின் இந்த சீசனில் டைட்டிலை வென்று புதிய வரலாறு படைப்பாரா என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தில் ராஜு ஸ்டைலில்
பிசிக்கல் மற்றும் மென்டல் ஸ்ட்ரெந்த் வேணுமா இருக்கு, காமெடி வேணுமா ஃபன் ஹ்யூமர் இருக்கு, எமோஷன் வேணுமா இருக்கு, கிளாரிட்டியா பாயிண்ட் பேசணுமா இருக்கு, கேம் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு, சிங்கிங், டான்ஸிங், குக்கிங் என எல்லாமே இருக்கு என தில் ராஜு ஸ்டைலிலேயே ஷிவினுக்கு அவரது ரசிகர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











