Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் கன்ஃபார்மா இவர் தான்... அப்போ அசீம் அவுட் ஆகுறது உறுதியா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 61வது நாளை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்பதில் அசீம், விக்ரமன், மணிகண்டன், ஷிவின் ஆகியோரிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.
பாபா ரீ-ரிலீஸுக்கு முன் சிவாஜி தி பாஸ்... ரஜினி ரசிகர்களுக்கு திடீரென ட்ரீட் கொடுத்த ஏவிஎம்!

பிக் பாஸ் இந்த வாரம் எவிக்சன்?
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இன்று 61வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். கடந்த இருவாரங்களில் முறையே ராபர்ட் மாஸ்டரும் குயின்ஷியும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் ஆகவுள்ளளது குறிப்பிடத்தக்கது. இதில், ராம், ஆயிஷா இருவரும் முன்னணியில் உள்ளனர்.

யார் டைட்டில் வின்னர்?
ராம், ஆயிஷா இருவரும் வெளியேறிவிட்டால், எஞ்சியிருக்கும் 11 போட்டியாளர்களுடன் இந்த சீசன் தொடரும். இந்நிலையில், இன்னும் 5 வாரங்கள் மட்டுமே போட்டி நடைபெறவுள்ளதால், டைட்டில் யாருக்கு என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த சீசன் தொடங்கியது முதலே லைம் லைட்டில் இருப்பது அசீம், தனலட்சுமி இருவரும் தான். அடிக்கடி சண்டை சச்சரவுகளில் சிக்கி வரும் இவர்கள் இருவருக்கும் பிக் பாஸ் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதேபோல், விக்ரமன், ஷிவின், மணிகண்டன் ஆகியோரும் டைட்டில் வின்னர் ரேஸில் இடம்பெற்றுள்ளனர்.

ஷிவினுக்கு பெருகும் ஆதரவு
பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமும் சண்டை போட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் அசீம், ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வந்து தப்பித்து விடுகிறார். அதனால், அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல், நீதி, நேர்மை, நியாயம் என விளையாடி வரும் விக்ரமன், தனலட்சுமி ஆகியோருக்கும் ரசிகர்களிடம் ஆதரவு உள்ளது. அதேநேரம் பிக் பாஸ் ரசிகர்களிடம் ஷிவின் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார். எல்லோரிடமும் நட்பாக பேசும் ஷிவின், தனது கேமை தெளிவாக விளையாடுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அசீம் ரன்னர் அப் தான்
திருநங்கையான ஷிவின் சக போட்டியாளர்களை சரியான விதத்தில் அணுகுவதோடு, பிரச்சினைகளின் போது தனது கருத்துகளை நாகரீகமாக எடுத்து வைக்கிறார். மேலும், எல்லா டாஸ்க்களிலும் நேர்மையாக விளையாடி வருகிறார். ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த அவர், அதனை சரியாக செய்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், அசீமை விடவும் ஷிவினுக்கு தான் ஆதரவு அதிகம் உள்ளது. ஷிவின் டைட்டில் வின்னர் என்றால், அசீம் ரன்னர் அப்பாக தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எல்லாவிதத்திலும் நடுநிலையாக இருக்கும் ஷிவின் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக வரவேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.