பணத்துடன் வெளியேறிய கதிர்..கதறி அழுத ஷிவின்..மன்னிப்பு கேட்ட கதிரவன்!
சென்னை: விஜே கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேறியதால் ஷிவின் கதறி கதறி அழுதார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பைனலிஸ்டாக அசீம்,விக்ரமன், அமுதவாணன், மைனா,ஷிவின் ஆகியோர் உள்ளனர். இதில் டைட்டிலை யார் வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6
அக்டோபர் மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்டாகி வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். வெளியே இருந்து உள்ளே வந்தவர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்று சொல்லக்கூடாது என்று பிக் பாஸ் ஆர்டர் போட்டுள்ளார்.

ரச்சித்தா வந்தார்
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று ரச்சித்தா மற்றும் ஆயிஷா வந்திருந்தார்கள். ரச்சித்தாவைப் பார்த்ததும் ஷிவின் கட்டியணைத்து கதறி கதறி அழுதார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் தான் இணைபிரியாத தோழியாக இருந்தனர். ரச்சித்தா வெறியேறியதால், வருத்தத்தில் இருந்த ஷிவின் அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார்.

பணத்தை எடுத்த கதிர்
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் பணத்தை எடுத்துச் செல்வது யார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கதிரவன் 3 லட்சம் ரூபாய் பணமூட்டையை எடுத்தார். பண மூட்டையை கதிர் அறுக்க முயற்சித்த போது அனைவரும் வேண்டாம் என பதறினார்கள். இன்னும் பணம் அதிகரிக்கும் காத்திரு என்றார்கள் ஆனால், யாருடைய பேச்சையும் கேட்காமல் கதிர் பணமூட்டையை எடுத்தார்.

கதறி அழுத ஷிவின்
இதையடுத்து , வீட்டை விட்டு வெளியேற ரெடியான கதிர், பணத்திற்காக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. இது தான் சரியான முடிவு என்று நினைக்கிறேன், வீட்டில் உள்ளவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் இந்த நாட்களை நான் என்றும் மறக்க மாட்டேன் என்றார். அப்போது தூரத்தில் இருந்து ஷிவின்,கதிரைப்பார்த்து கதறி அழுதுக்கொண்டே இருந்தார். இதையடுத்து, ஆயிஷாவிடம் சாரி கேட்ட கதிரவன் அவர் வந்ததிலிருந்து ஒருநாள் கூட பிக்பாஸ் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார். வெளியில் வந்து பேசு என்றார். பின்னர் அருகில் இருந்த ஷிவினிடம் பேசும் கதிர் அவரிடம் போட்டிக்காக வாழ்த்து சொல்ல, கதிருக்கு ஷிவின் கை கூடக்கொடுக்காமல் கையை கூப்பி கதிருக்கு வணக்கம் சொல்லி கதிரை வழியனுப்பினார்.


Click it and Unblock the Notifications











