Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜய்க்கு சிரிக்க மட்டும்தான் தெரியும்.. இளமைக்காலம், நண்பர்கள் குறித்து பகிர்ந்த ஷோபா சந்திரசேகர்!
சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
நடிகர் விஜய் தன்னுடைய தந்தையுடன் மனக்கசப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தன்னுடைய பெற்றோரை சந்திக்காமல் உள்ளார்.
பாட்ஷா
2
எடுக்க
ரஜினி
தயங்குவது
இதனால்தான்...
ஆனால்
காத்திருக்கும்
பாட்ஷா
இயக்குநர்
சுரேஷ்
கிருஷ்ணா

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான பீஸ்ட் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. ஆனாலும் படம் வழக்கமான விஜய் படங்களை போலவே வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படம் விஜய் ரசிகர்களை கவரவே செய்தது. தொடர்ந்து அவர்கள் படத்தை கொண்டாடினர்.

வாரிசு படம்
இந்நிலையில் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. 3 போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பொங்கல் ரிலீஸ்
வாரிசு படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தந்தைமீது மனக்கசப்பு
இதனிடையே தன்னுடைய அப்பா சந்திரசேகர் மீதான மனக்கசப்பு காரணமாக தொடர்ந்து தனது பெற்றோரை சந்திக்காமல் உள்ளார் விஜய். இந்த விஷயம் பல விமர்சனங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. தொடர்ந்து சந்திரசேகர் தன்னை தன்னுடைய மகன் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்.

மௌனம் சாதிக்கும் விஜய்
இந்த விஷயத்தில் விஜய் தனது மனதை மாற்றிக் கொண்டு தனது பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார் தன்னுடைய தந்தை மீது மனக்கசப்பு உள்ளதால் தன்னுடை தாய் ஷோபாவையும் அவர் சந்திக்காமல் உள்ளார்.

விஜய்யின் நட்பு
ஆனால் ஷோபா சந்திரசேகர் தொடர்ந்து தன்னுடைய மகனின் இளமைக்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை தொடர்ந்து தனியார் ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் நண்பர்கள் குறித்து அவர் தற்போது பகிர்ந்துள்ளார். ஸ்ரீநாத், சஞ்சீவ், மனோஜ் மற்றும் ராம்குமார் என 4 நண்பர்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

தொடரும் நட்பு
இந்த கல்லூரி நட்பு தற்போதுவரை தொடர்ந்து வருவதாகவும், இதில் ஸ்ரீநாத், சஞ்சீவ் மட்டுமே சினிமாத்துறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் 5 பேரும் சேர்ந்துவிட்டால், ஸ்ரீநாத்தின் குரல்தான் ஓங்கி இருக்கும் என்றும் அவரின் நகைச்சுவைகளுக்கு விஜய்யின் சிரிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

களைகட்டும் விருந்து
இவர்கள் 5 பேரும் இணைந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் கூடி தினந்தோறும் பேசி அரட்டை அடிப்பார்கள் என்றும் வீட்டில் இவர்கள் அனைவரும் வந்துவிட்டால் அன்றைய தினம் அசைவ விருந்தும் களைகட்டும் என்றும் ஷோபா சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் வெளுத்துக் கட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அம்மாவின் விருப்பம்
இவர்களின் இந்த நட்பு தற்போதுவரை தொடர்ந்து வருவதாகவும், தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். படங்களில் அதிகமாக நகைச்சுவை செய்துவரும் விஜய், நிஜத்தில் மிகவும் சைலண்டானவர். அவரை கல்லூரி காலங்களில் அதிகமாக சிரிக்க வைத்த நட்பு தொடர வேண்டும் என்பதே அவரது அம்மாவின் விருப்பமாக உள்ளது.