»   »  டீக்கடைக்காரர்கள் தொல்லை-நடிகை ஷோபனா புகார்

டீக்கடைக்காரர்கள் தொல்லை-நடிகை ஷோபனா புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தனது வீட்டின் எதிரே சிலர் டீக்கடை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் தொல்லை செய்து வருவதாக மாநகர காவல்துறை ஆணையரிடம் நடிகை ஷோபனா புகார் கொடுத்துள்ளார்.


மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி மற்றும் நடிகர் வினீத்தின் உறவினர் ஷோபனா. பல்வேறு படங்களில் நடித்துள்ள ஷோபனா தற்போது பரதநாட்டியத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். இவரது வீடு சென்னை வேளச்சேரியில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார் ஷோபனா. பின்னர் வெளியே வந்த அவரிடம் என்ன ஏது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது வீட்டுக்கு எதிரே சிலர் டீக்கடைகள் வைத்துள்ளனர். மேலும், வாகனங்களையும் நிறுத்தி வைத்துக் கொண்டு பெரும் இடையூறு செய்கின்றனர்.

அவர்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு கொடுத்து விட்டு வந்தேன் என்றார் ஷேபானா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil