»   »  தீயா பரவிய போட்டோவில் இருப்பது 'குட்டி தல' இல்லையா?: யார் பார்த்த வேலைடா இது?

தீயா பரவிய போட்டோவில் இருப்பது 'குட்டி தல' இல்லையா?: யார் பார்த்த வேலைடா இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் மிகவும் பிரபமான புகைப்படத்தில் இருப்பது அஜீத்தின் மகனே அல்ல என்று கூறப்படுகிறது.

இரண்டாவது முறை கர்ப்பமான ஷாலினி அஜீத் கடந்த 2ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே குட்டி தல என்று ஒரு குழந்தையின் புகைப்படம் தீயாக பரவியது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு குட்டி தல என்று கூறி அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர்.

Shocker: This Baby Does NOT Belong To Thala Ajith?

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது குட்டி தலயே இல்லை என்று தெரிய வந்துள்ளது. அது சீனாவைச் சேர்ந்த குழந்தையின் புகைப்படமாம். சீன குழந்தையின் புகைப்படம் எப்படி குட்டி தலயின் புகைப்படமானது என்று தெரியவில்லை.

குட்டி தலயின் புகைப்படத்தை வெளியிடும் ஆசையில் ஏதாவது ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் இல்லை என்றால் அது விஷமிகளின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குட்டி தலயின் புகைப்படத்தை விரைவில் அஜீத் அல்லது அவரது குடும்பத்தார் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. யார் பார்த்த வேலைய்யா இது?

English summary
Thala Ajith was blessed with a baby boy on March 2nd 2015 and the news spread like wildfire across all social media networks and online media. A photo of a baby was also circulated along with Ajith's photo claiming that the baby seen in the photo was Ajith's newborn. However, a reliable source has revealed that it is not Kutty Thala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil