For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன சொல்றீங்க.. பிக் பாஸ் வீட்டுக்குள் அடி தடி சண்டையா? ரூல்ஸை மீறி போட்டியாளர்கள் வெறியாட்டம்!

  |

  சென்னை: முதல் வாரம் மொக்கையா போகுதே.. வாய் சண்டையே வொர்த் இல்லாம இருக்கே என பார்த்தால், பிக் பாஸ் வீட்டுக்குள் கைகலப்பு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

  சுரேஷ் சக்கரவர்த்தியை மிரட்டிய ரியோ.. இன்றைய டாப் 5 பீட்ஸ் - வீடியோ

  இதுவரை வெளியான புரமோ வீடியோக்களில் கூட அதை காட்டவில்லையே என ரசிகர்கள் நினைத்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வெடித்த வாய் சண்டை அடி தடி சண்டையாக மாறி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் உறுதிபடுத்தி உள்ளன.

  யாருக்கும் யாருக்கும் சண்டை யார், யாரை அடித்தார் என்பதை விரைவில் விஜய் டிவியே புரமோவில் வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  எல்லோரையும் கதறவிடும் மொட்டை அங்கிள்.. டபுள் பேமென்ட் போல.. வனிதாலாம் பின்னாடி போக வேண்டியதுதான்!

  ரொம்ப போர்

  ரொம்ப போர்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் வார நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஷிவானியை சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி உள்ளிட்ட ஹவுஸ் மேட்ஸ்கள் கார்னர் செய்தார்கள். அதன் பின்னர், அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் எச்சில் தெறிக்கும் சண்டை நடந்தது. இறுதியாக வெடித்த பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி சண்டை தான் கொஞ்சம் வொர்த்தான சண்டையாக இருந்தது.

  ஆம்பள வனிதா

  ஆம்பள வனிதா

  இந்த பிக் பாஸ் சீசனில் வனிதா விஜயகுமார் யார் என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்தது. அனிதா சம்பத்தை வனிதா ரேஞ்சுக்கு எதிர்பார்த்தனர். ஆனால், இறுதியில் அவர் அழுகாச்சி ஜூலியாக மாறிவிட்டார். சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஆம்பள வனிதா என்றும், வனிதாவையே இவர் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றும் ரசிகர்கள் சுரேஷ் ஆர்மியினராகி வருகின்றனர்.

  நமத்துப் போன பட்டாசு

  நமத்துப் போன பட்டாசு

  பிக் பாஸ் முதல் வார நிகழ்ச்சியை ரசிகர்கள் ட்ரோல் பண்ணுவதை காட்டிலும், மொட்டை அங்கிள் சுரேஷ் சக்கரவர்த்தி தான் பங்கமாக கலாய்த்து வருகிறார். டம்மி டப்பாசு, நமத்துப் போன பட்டாசு, போட்டியாளர்கள் எல்லாம் வேஸ்ட், சமாதானமாவே பேசிட்டு வராங்க, சண்டை போட மாட்றாங்க என கலாய்த்தார்.

  ரியோவுக்கும் சுரேஷுக்கும்

  ரியோவுக்கும் சுரேஷுக்கும்

  விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால், பிக் பாஸ் வீட்டில் சமத்துப் பிள்ளையாக இருந்து விட்டு போயிடலாம் என இருந்த ரியோ ராஜின் இன்னொரு முகத்தை காட்ட பிக் பாஸ் குழு சீண்டி விட்டு உள்ளது. சுரேஷ் சாருக்காக இரக்கப்பட்டு படுக்கையை எல்லாம் வாங்கித் தந்த ரியோவுக்கும், சுரேஷுக்குமே இப்போ முட்டிக்கிச்சு.

  குரூபிஸம் சண்டை

  குரூபிஸம் சண்டை

  இன்று வெளியான மூன்றாவது புரமோ வீடியோவில், என்ன கார்னர் பண்றாங்க, இங்கே குரூபிஸம் இருக்கு என நம்ம மொட்டை மாமனார் சுரேஷ் சக்கரவர்த்தி குற்றம்சாட்டுகிறார். அவரிடம் நடிகர் ரியோ ராஜ் எகிறுகிறார். இதைத் தொடர்ந்து தான் பிக் பாஸ் வீட்டில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அடி தடி சண்டை

  அடி தடி சண்டை

  இந்நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான அப்டேட்களை கொடுத்து வரும் சில ட்விட்டர் ஐடிக்கள், பிக் பாஸ் வீட்டில் Physical Violence நடந்து உள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதுவரை அந்த நெருங்கிய வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்கள் பொய்யானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்கூட்டியே கசிவு

  முன்கூட்டியே கசிவு

  பிக் பாஸ் தமிழ் 4ல் நடிகர் ரியோ ராஜ், ஷிவானி, ரம்யா பாண்டியன், ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, நிஷா, கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், வேல் முருகன், சோமசேகர் என அனைத்து போட்டியாளர்கள் குறித்த அப்டேட்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இவர்கள் கசிய விட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  வெறியாட்டம்

  வெறியாட்டம்

  பிக் பாஸ் வீட்டின் ரூல்கள் எல்லாம் மீறப்பட்டு, Physical Violence நடந்து இருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் யாருக்கும், யாருக்கும் சண்டை என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தியை தாக்கி விட்டாரா என்கிற பரபரப்பும் கிளம்பி இருக்கிறது. வேல்முருகன் சண்டையில் கலந்து கொண்டார் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. நிச்சயம் இன்றைய நிகழ்ச்சி வேற லெவல் ரகளையாக இருக்கும் என்றே தெரிகிறது.

  English summary
  Physical violence held in Bigg Boss Tamil 4 house. After Rio Raj and Suresh Chakaravarthy fight promo out now, shocking news about Bigg Boss Tamil 4 fight buzz circulates viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X