twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவிற்கும் ஷூட்டிங் நடத்த வாருங்கள்: உம்மன்சாண்டி அழைப்பு

    |

    சென்னை: வெளிநாடுகளுக்கு சென்று படமெடுப்பதைப் போல் கேரளாவிற்கும் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி.

    சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி. அப்போது, படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கேரளத்துக்கு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும், விழாவில் அவர் பேசியதாவது...

    கடவுளின் தேசம்...

    கடவுளின் தேசம்...

    ‘ மிகச்சிறந்த சுற்றுலாப் பிரதேசமான கேரளத்தில் படப்பிடிப்புக்கு ஏற்ற மிக அழகான இடங்கள் உள்ளன.

    கேரளத்து அழகை பாருங்கள்...

    கேரளத்து அழகை பாருங்கள்...

    எனவே, சினிமா எடுப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக கேரளத்துக்கு வரவேண்டும். கேரளத்தின் அழகை தங்களது படங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ஆவணக்காப்பகம்....

    ஆவணக்காப்பகம்....

    மலையாள சினிமா இப்போது 75-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதையொட்டி, கேரள திரைப்பட ஆவணக் காப்பகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

    மானியம்....

    மானியம்....

    சினிமாவைக் காப்பாற்ற கேரளத்தில் திருட்டு வி.சி.டி. தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்தில் திரைப்படங்களுக்கான மானியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

    English summary
    The Kerala chief minister Ommen chandi invited the film makers to use his state as shooting spot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X