»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மைசூர் அருகே "சமுத்திரம்" தமிழ் திரைப்படப் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கலவரத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட 34 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே மண்டித கொப்பலு கிராமம் உள்ளது. இங்குள்ள "காவேரி போரேதேவரு" என்ற கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் அதிகமாகக் கூடுவர்.

நடிகர் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் "சமுத்திரம்" படப்பிடிப்பு இந்தக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமைமாலை நடந்தது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் ஒரு காட்சியில்நடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருந்ததனர். இது படப்பிடிப்புக்கு இடையூறாகஇருப்பதாகத் தெரிந்ததால், படப்பிடிப்புக் குழுவினர் பக்தர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இது முற்றி தகராறாகமாறியது. பின்னர் பக்தர்கள் சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து, 100 பேர் கூட்டமாக வந்து படப்பிடிப்புக் குழுவினர்மீது கல் வீசினார்கள்.

இந்தக் கல்வீச்சில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் கையில் காயம் ஏற்பட்டது. இவர் தவிர, மேலும் 34படப்பிடிப்புக் குழுவினர் காயமடைந்தனர். படப்பிடிப்புக் குழுவினரின் 2 கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவைஅடித்து நொறுக்கப்பட்டனர்.

காயமடைந்த அனைவரும் மைசூரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகர்கள் சரத்குமார், கவுண்டமணியும்தாக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து, அரகரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil