»   »  பிரபாஸை க்ளீன் போல்டு செய்த நடிகை ஷ்ரத்தா கபூர்

பிரபாஸை க்ளீன் போல்டு செய்த நடிகை ஷ்ரத்தா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் போலி | பிரபாஸை க்ளீன் போல்டு செய்த நடிகை

மும்பை: தனக்கு சூப்பர் விருந்து வைத்த பிரபாஸை இம்பிரஸ் செய்துள்ளார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

ஷ்ரத்தா கபூர் ஹைதராபாத் வந்தபோது 18 வகை உணவுகள் அடங்கிய விருந்து கொடுத்து அவரை அசத்தினார் பிரபாஸ். ஹைதராபாத் ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தார் ஷ்ரத்தா.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

தன்னை அசர வைத்த பிரபாஸை ஷ்ரத்தா கபூரும் அசத்தியுள்ளார். விருந்து கொடுத்து அல்ல மாறாக பிரபாஸை சந்திக்கும் முன்பு அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு வந்துள்ளார் ஷ்ரத்தா.

சந்திப்பு

சந்திப்பு

பிரபாஸை சந்தித்தபோது அவர் நடித்த படங்களின் விபரங்களை எல்லாம் தெரிவித்து இம்பிரஸ் செய்துள்ளார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.

சிறந்த படங்கள்

சிறந்த படங்கள்

சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் சிறந்த படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன் என நினைக்கிறேன் என்று ஷ்ரத்தா கூறியுள்ளார்.

English summary
Shraddha Kapoor has found a very smart way to impress Prabhas before shooting for Saaho. She watched all his south movies before she met him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil