'லொகேஷனை சொல்லுங்க, தேடி வர்றோம்...' சத்தம் போடாமல் சென்னையில் ரெஸ்டாரென்ட் தொடங்கிய பிரபல ஹீரோயின்!
சென்னை: பிரபல ஹீரோயின் சத்தம் போடாமல் சென்னையில் ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
கன்னடத்தில் வெளியான யு டர்ன் படம் மூலம் அறியப்பட்டவர் ஸ்ரத்தா ஶ்ரீநாத். தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.
View this post on InstagramA post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on
விஷாலின் சக்ரா
பின்னர் மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா, ரிச்சி, கே13, அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், இப்போது, விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
View this post on InstagramA post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on
ரெஸ்டாரென்ட்
இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் சிறிய ரெஸ்டாரென்ட் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், ஒரு ரெஸ்டாரென்டை விட சின்னதாக இருக்கலாம். ஆனால் ஒரு ஓட்டலை விட கொஞ்சம் பெரிதுதான். கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும். சென்னையின் மிகச்சிறந்த புதிய சாலட் பார் மற்றும் கஃபேவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாடகர் சித் ஶ்ரீராம்
மேலும் அவர், நாங்கள் எங்கள் கதவுகளை திறக்கிறோம். உங்கள் அன்பை தாருங்கள்' என்று கூறியுள்ளார். இந்த புதிய ரெஸ்டாரென்ட்டுக்கு Per Se என்று பெயரிட்டுள்ளார். இதற்கு பாடகி சக்திஶ்ரீ கோபாலன், பாடகர் சித் ஶ்ரீராம், பாடகி சின்மயி உட்பட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர், ஸ்ரத்தாவுக்கு.

பெங்களூர்ல எப்ப?
'வேளச்சேரின்னா வந்திருப்பேனே... அந்த பீனிக்ஸ் மால்தானே' என்று சிலர் ரசிகர்களும், லொகேஷனை போடுங்க, தேடி வந்து சாப்பிடறோம் என்று சில ரசிகர்கள் கேட்டுள்ளனர். உங்க கடையோட ருசியை சாப்பிட்டுப் பார்க்க ஆசையா இருக்கு, வந்திடறோம் என்று சிலரும் சென்னையில ஓகே, அப்ப பெங்களூர்ல எப்ப ஓபன் பண்ண போறீங்க?' என்று சில ரசிகர்களும் கமென்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











