»   »  சென்னை ரசம் மட்டும் வேண்டும், தமிழ் வணக்கம் வேண்டாமா ஷ்ரேயா...?

சென்னை ரசம் மட்டும் வேண்டும், தமிழ் வணக்கம் வேண்டாமா ஷ்ரேயா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொழும்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாட்டுப் பாடி விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்திப் பாடகி ஷ்ரேயா கோஷல்.

பாலிவுட் பாடகியான ஷ்ரேயா கோஷல் தமிழிலும், பிற இந்திய மொழிகளா் சிலவற்றிலும் பாடல்கள் பாடியவர். பிரபலமான பாடகியாக வலம் வரும் ஷ்ரேயா கொழும்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பியுள்ளார்.

மார்ச் 28ம் தேதி கொழும்பில் உள்ள ஹேவ்லாக் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இலங்கையில் ஷ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் பெரும் கூட்டம் கூடியிருந்தது.

பாடல் பாடி

பாடல் பாடி

இந்த இசை நிகழ்ச்சியில் பிரபலமான பாடல்கள் பலவற்றைப் பாடி கூட்டத்தினரை குஷிப்படுத்தினார் ஷ்ரேயா கோஷல்.

டிக்கி டிக்கிரி

டிக்கி டிக்கிரி

அது மட்டுமல்லாமல் டிக்கி டிக்கிரி என்ற சிங்களப் பாடலையும் பாடி சிங்களர்களை சந்தோஷிக்க வைத்தார்.

யானைக் குட்டி

கொழும்பு பயணத்தின்போது பின்னவலாவில் உள்ள யானைகள் சரணாலயத்திற்குப் போய் அங்கு யானைக் குட்டிகளையும் வேடிக்கை பார்த்து விட்டு வந்துள்ளார் ஷ்ரேயா. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் படமும் போட்டுள்ளார்.

ஆய்புவன் மட்டுமே

ஆய்புவன் மட்டுமே

கச்சேரிக்காக கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்த அவர் அங்கு டிவி நிருபர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கும்போது முதலில் ஆய்புவன் என்று சிங்களத்திலும், பின்னர் நமஸ்கார் என்றும் வணக்கம் தெரிவித்தார்.

தமிழ் வணக்கம் இல்லை

தமிழ் வணக்கம் இல்லை

ஆனால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வணக்கம் என்று அவர் தமிழில் வணக்கம் சொல்லவில்லை. மறந்து விட்டாரா அல்லது சொல்ல வேண்டாம் என்று யாரேனும் அறிவுறுத்தியிருந்தார்களா என்பது தெரியவில்லை.

சென்னையிலிருந்து

கொழும்புக்கு செல்வதற்கு முன்பு 2 நாளைக்கு முன்பு சென்னைக்கு வந்து அங்கிருந்து அவர் கொழும்பு போயுள்ளார். சென்னைக்கு வருவது குறித்து அவர் போட்ட ஒரு டிவிட்டில், ரசம் சாப்பிடும் நேரம் வந்து விட்டது.. சென்னை எப்படி இருக்கு சூடா இருக்கா என்று கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ரசம்... மட்டும்!

சென்னை ரசம்... மட்டும்!

சென்னை ரசம் வேண்டும்.. தமிழ் வணக்கம் வேண்டாமா ஷ்ரேயா...!?

English summary
Noted singer Shreya Goshal attended a live in concert in Colombo few days back and sang a Sinhala song too.
Please Wait while comments are loading...