»   »  ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்!?

ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்!?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 2001-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

பிறகு, சில தோல்விப் படங்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசூரன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2001-ல் அறிமுகம்

2001-ல் அறிமுகம்

2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ரஜினி ஜோடியாக

ரஜினி ஜோடியாக

ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007-ல் வெளிவந்த 'சிவாஜி' படம் நல்ல வெற்றி பெற்றதால் டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.

மார்க்கெட் சரிவு

மார்க்கெட் சரிவு

ஸ்ரேயா நடித்து பின்னர் வெளிவந்த படங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது.

நரகாசூரன்

நரகாசூரன்

தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார் ஸ்ரேயா. அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'காயத்ரி' விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் வெளிவர உள்ளது.

திருமணம்

திருமணம்

இதற்கிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

17 வருடங்கள்

17 வருடங்கள்

நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால் ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விரும்புகிறார் என்கிறார்கள். ஆனால், சமீபத்தில் கூட வயதானாலும் கூட தொடர்ந்து நடிப்பேன் எனத் தெரிவித்திருந்தார் ஸ்ரேயா. திருமணம் தொடர்பான தகவலுக்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Shriya saran, who debuted in film industry in 2001, has starred with many leading heroes in Tamil and Telugu. Shriya will marry her Russian boyfriend in March.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil