»   »  நகை, உடைகள் ஆர்டர் செய்தது உண்மை தான், ஆனால்...: ஸ்ரேயா திருமணம் பற்றி அம்மா பேட்டி

நகை, உடைகள் ஆர்டர் செய்தது உண்மை தான், ஆனால்...: ஸ்ரேயா திருமணம் பற்றி அம்மா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஷ்ரேயாக்கு திருமணமா ?

மும்பை: ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் திருமணம் என்று வெளியான செய்திகள் குறித்து அவரின் அம்மா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்த ஸ்ரேயாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை. தன்னை தேடி வரும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார்.

35 வயதாகும் அவருக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ஸ்ரேயாவுக்கும், ரஷ்யாவை சேர்ந்த அவரின் காதலருக்கும் அடுத்த மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியாகின.

மறுப்பு

மறுப்பு

எனக்கு திருமணம் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. நான் யாரையும் திருமணம் செய்யவில்லை என்று ஸ்ரேயா தெரிவித்துள்ளார். அவரின் தாயும் திருமண செய்தியை மறுத்துள்ளார்.

இல்லை

இல்லை

என் மகள் பற்றி வெளியான செய்தி எல்லாமே பொய். அவர் இந்த மாதம் மற்றும் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடக்கும் தனது தோழியின் மற்றும் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்கிறார். அதற்காக தான் அவர் நடிகைகள் மற்றும் உடைகளுக்கு ஆர்டர் செய்துள்ளார் என்று ஸ்ரேயாவின் அம்மா நீரஜா தெரிவித்துள்ளார்.

இந்தி

இந்தி

ஸ்ரேயா தெலுங்கில் காயத்ரி படத்தில் நடிக்கிறார். இது தவிர பிரகாஷ் ராஜின் உன் சமையல் அறையில் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார். காயத்ரி படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

உடை

உடை

ஸ்ரேயா நகைகள், உடைகள் ஆர்டர் செய்ததால் அவருக்கு தான் திருமணம் என்று வதந்தி கிளம்பியுள்ளது. இரண்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே புது நகைகள், உடைகள் வாங்குகிறார் ஸ்ரேயா.

English summary
Actress Shriya Saran's mother Neerja said that her daughter is not getting married. Shriya ordered jewels and dress to attend two weddings in Rajasthan, she added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil