பாகுபலி 2: பல்லாலத் தேவனின் மனைவியாக மாறும் ஸ்ரேயா?

By Manjula

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் 2 வது பாகத்தில் ராணாவின் மனைவியாக நடிகை ஸ்ரேயா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் பாகுபலி.

இப்படத்தின் 2 வது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 வேலைகளில் ராஜமௌலி தற்போது மும்முரம் காட்டி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தின் பல புதிர்களுக்கு இந்தப் பக்கத்தில் விடை தெரியவரும் என்பதால், ரசிகர்களும் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ராணா டகுபதி

ராணா டகுபதி

முதல் பாகத்தில் ராணாவிற்கு மகன் மட்டும் இருப்பது போல காட்சிகள் இருந்தன. இந்நிலையில் பல்லாலத் தேவனாக வந்து வில்லத்தனம் காட்டிய ராணாவிற்கு, இந்தப் பாகத்தில் மனைவி இருப்பது போல காட்ட ராஜமௌலி திட்டமிட்டு இருக்கிறார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

தற்போது ஸ்ரேயா, ராணாவின் மனைவியாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ராணாவைப் போல அவரின் மனைவி வேடமும் வில்லத்தனம் நிறைந்து இருக்குமாம். இதனால் படங்கள் இன்றி தவித்து வரும் ஸ்ரேயாவுக்கு, இப்படம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

அடுத்த வருடம்

அடுத்த வருடம்

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் டீசரை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பாகுபலி 2 அடுத்த வருடம் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X