»   »  இன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்?

இன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ஸ்ரேயா தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவை கடந்த மார்ச் 12-ம் தேதி ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

தங்களது காதலை மீடியாவுக்கு தெரியாமல் மறைத்து வந்தார் ஸ்ரேயா. தனது திருமணம் தொடர்பாக வந்த செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துவந்தார் ஸ்ரேயா.

ஆனால், ஆண்ட்ரே கோஷ்சீவையே தற்போது ரகசியத் திருமணம் செய்துகொண்டுள்ளார் ஸ்ரேயா. அவரது காதலர் புகைப்படம் இன்ஸ்டாகிராம் மூலமாகவே முதலில் கசிந்தது.

ஸ்ரேயா - ஆண்ட்ரே கோஷ்சீவ்

ஸ்ரேயா - ஆண்ட்ரே கோஷ்சீவ்

ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் மார்ச் மாதம் 17, 18,19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவியது. ஆனால், தனக்கு தற்போது திருமணம் இல்லை என மறுத்துவந்தார் ஸ்ரேயா.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஸ்ரேயா தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தாராம்.

மாட்டிக்கொண்ட ஸ்ரேயா

மாட்டிக்கொண்ட ஸ்ரேயா

ஸ்ரேயா யாரைத் திருமணம் செய்யப்போகிறார் என்பது பற்றியும், அவரது காதலர் பற்றியும் முதலில் தகவல் வெளிவராமல் இருந்தது. பின்னர், இன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்டார் ஸ்ரேயா. இன்ஸ்டாவில் ஆண்ட்ரே கோஷ்சீவ் ஃபாலோ செய்யும் ஒரே இந்திய நடிகை ஸ்ரேயா மட்டும் தான்.

ஆண்ட்ரே கோஷ்சீவ்

ஆண்ட்ரே கோஷ்சீவ்

ஸ்ரேயாவின் காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவ் (Andrei Koscheev) ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரரும் தொழிலதிபரும் ஆவார். ஸ்ரேயாவும், ஆண்ட்ரேவும் மொழியால் வேறுபட்டாலும் மனதால் இணைந்திருக்கிறார்கள்.

English summary
Actress Shriya saran secretly married her Russian boyfriend Andrei Koshcheev on March 12. Her boyfriend's photo first leaked through Instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X