»   »  லீக்கானது ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படங்கள்

லீக்கானது ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
லீக்கான ஸ்ரேயாவின் ரகசிய திருமண வீடியோ

மும்பை: நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்கள், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை மும்பையில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாய்பாயை தவிர வேறு எந்த பிரபலமும் கலந்து கொள்ளவில்லை.

மும்பை

மும்பை

16,17 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் முன்னதாகவே 12ம் தேதி மும்பையில் ரகிசயமாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா.

ஸ்ரேயா

ஸ்ரேயா

ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் குறித்து செய்திகள் வெளியானதே தவிர புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரேயாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மணமகள்

ஸ்ரேயாவும், ஆண்ட்ரேவும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஆண்ட்ரே இந்திய முறைப்படி உடை அணிந்துள்ளார்.

வாழ்த்து

ஸ்ரேயா, ஆண்ட்ரேவின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலரோ ஏன் இந்தியரை திருமணம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியா

இந்தியா

திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா தனது கணவருடன் ரஷ்யாவில் செட்டில் ஆவாரா இல்லை ராதிகா ஆப்தே போன்று இந்தியாவில் இருந்து கொண்டு அவ்வப்போது சென்று கணவரை பார்த்து வருவாரா என்று தெரியவில்லை.

English summary
Pictures taken during actress Shriya Saran's wedding is out on social media. While majority of the fans wished her all the best, some questioned as to why didn't she marry an Indian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X