»   »  அஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்?

அஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் படம் ஹிட்டாகியுள்ளது. அதிலும் அருண் விஜய்க்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனால் அவர் பெருமகிழ்ச்சியில் உள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

தமன்னா

தமன்னா

சிறுத்தை சிவா தான் அஜீத்தை மீண்டும் இயக்கும் படத்தில் தன்னுடைய ஆஸ்தான நாயகியான தமன்னாவையே நடிக்க வைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் ஹீரோயின் தமன்னா இல்லையாம்.

சமந்தா

சமந்தா

அஜீத் ஜோடியாக சமந்தா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் சமந்தாவும் இல்லை என்று கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் தான் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்

விஜய்

ஸ்ருதி தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that it is Shruti and not Samantha who is going to act with Ajith in his upcoming movie to be directed by Siruthai Siva.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil