»   »  முதல்முறையாக கமலுடன் மோதும் ஸ்ருதி... வெற்றி தந்தைக்கா, மகளுக்கா?

முதல்முறையாக கமலுடன் மோதும் ஸ்ருதி... வெற்றி தந்தைக்கா, மகளுக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் மற்றும் தூங்காவனம் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. இதன் மூலம் தனது தந்தை கமல்ஹாசனுடன் நேரடியாக மோதுகிறார் மகள் ஸ்ருதி ஹாசன்.

கமல்ஹாசன், த்ரிஷா, ஆஷா சரத், சம்பத், கிஷோர், பிரகாஷ்ராஜ், மது ஷாலினி மற்றும் உமா ரியாஸ்கான் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தூங்காவனம்.


Shruthi to Clash with Kamal

கமலின் நீண்டநாள் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நாளை தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


அஜீத், ஸ்ருதி ஹாசன், தம்பி ராமையா, அப்புக்குட்டி, அஸ்வின் மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.


இந்தத் தீபாவளி தினத்தில் 4வது முறையாக கமலுடன் அஜீத் மோதவிருக்கிறார். இந்நிலையில் கமலுடன் அவரது மகளான ஸ்ருதிஹாசன் முதல்முறையாக இந்த தீபாவளி தினத்தில் மோதுகிறார்.


அஜீத், கமல் மோதலைவிட இந்த மோதலே பெருமளவில் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்த்த புலி அவருக்கு கைகொடுக்கவில்லை.


இதனால் அஜீத்துடன் நடித்த வேதாளத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். வீரம் படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா 2 வது முறையாக அஜீத்துடன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வேதாளம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தீபாவளி மோதலில் வெற்றி பெறப்போவது கமலா அல்லது அஜித்தா என்பதை விட இந்த மோதலில் வெற்றி பெறப்போவது தந்தை கமலா அல்லது மகள் ஸ்ருதியா? என்பதுதான் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.


இதற்கான விடையை நாளைய பொழுது தீர்மானித்து விடும் எனினும் நாம் காத்திருந்து பார்க்கலாம்.

English summary
Thoonga Vanam, Vedalam will be Released on November 10th for Diwali Festival. Now Shruthi Haasan to Direct Clash with her Father Kamal Haasan, Who is Winning this Battle Wait and See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil