twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷ்ருதி ஹாசனுக்கு என் மடியில் வைத்துதான் மொட்டையடித்தார்கள் – இயக்குநர் சந்தான பாரதி

    |

    சென்னை: விக்ரம் திரைப்படத்தில் ஏஜண்ட் உப்பிலியப்பனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி அவர்கள்.

    பழம் பெரும் நடிகர் MR சந்தானத்தின் மகன்தான் சந்தான பாரதி. இவர் எப்படி இயக்குநர் ஆக வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்தாரோ, அதே போல இவரது மகன் சஞ்சய் பாரதியும் ஒரு இயக்குநர்தான். ஹரிஷ் கல்யான் நடித்திருந்த தனுச ராசி நேயர்களே படத்தை இயக்கியுள்ளார்.

    விக்ரம் படத்தில் இவர் நடித்திருந்த காட்சிகள் நகைச்சுவையாகவும் கிளைமாக்ஸில் விருவிருப்பாகவும் இருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்திருக்கும் சந்தான பாரதி பல செய்திகளை பகிர்ந்துள்ளார்.

    விக்ரம் டைட்டில் சாங்கை பாடியவர் லோகேஷ் பள்ளி சீனியரா...அவரே சொன்ன செம தகவல் விக்ரம் டைட்டில் சாங்கை பாடியவர் லோகேஷ் பள்ளி சீனியரா...அவரே சொன்ன செம தகவல்

    கமலுடன் நட்பு

    கமலுடன் நட்பு

    கமல் கதாநாயகன் ஆவதற்கு முன்பிருந்தே இருவரும் நண்பர்கள். ஒரே பகுதியில் டுடோரியலில் ஒன்றாக படித்து, ஒன்றாக உடற்பயிற்சி செய்து, ஒன்றாகவே திரைத் துறையில் வளர்ந்தவர்கள். கமல் என் நண்பன் இல்லை, என் நண்பனாக இருந்தவன்தான் பிற்காலத்தில் கமல் ஹாசன் ஆனார். ஷ்ருதி ஹாசனுக்கு மொட்டை போடும்போது கூட என் மடியில் வைத்துதான் மொட்டை போட்டார்கள் என்று கூறியுள்ளார்.

    விக்ரம்

    விக்ரம்

    விக்ரம் திரைப்படத்தில் மக்களை கவரும் வகையில், யாரும் எதிர்ப்பார்க்காத ஏஜண்ட் டீனா, ஏஜண்ட் லாரன்ஸ் என்று சில கதாப்பாத்திரங்களில் திருப்பங்கள் இருந்தது. அந்த வகையில் சந்தான பாரதி நடித்திருந்த ஏஜண்ட் உப்பிலியப்பன் கதாப்பாத்திரமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. படம் பார்க்கும் வரை தானும் ஒரு ஏஜண்ட் என்று தனக்கு தெரியாது. படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.

    இயக்கிய படங்கள்

    இயக்கிய படங்கள்

    ஆரம்ப காலக்கட்டத்தில் இவரும் இயக்குநர் P.வாசு அவர்களும் சேர்ந்து பாரதி வாசு என்கிற பெயரில் படங்களை இயக்கினர். பின்னர் கமல் தயாரிப்பில் சத்யராஜ் நடிப்பில் உருவான கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படம் மூலம் தனி இயக்குநர் ஆனார். கமல் ஹாசன் நடித்த குணா மற்றும் மகாநதி,பிரபு நடித்த சின்ன மாப்பிள்ளை, வியட்நாம் காலனி ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

    மக்களிடம் சேர்த்தது 4 படம்

    மக்களிடம் சேர்த்தது 4 படம்

    என்னதான் படங்களை இயக்கியிருந்தாலும், இவரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது நடிப்புதான். கரகாட்டக்காரன், மைக்கேல் மதன காம ராஜன், அன்பே சிவம், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மூலமாகத்தான் தன்னை மக்கள் கவனித்ததாகவும், குறிப்பாக கரகாட்டக்காரன் பட்டி தொட்டியெங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது போல விக்ரம் திரைப்படம் தன்னை A சென்ட்டர் ஆடியன்ஸிடம் கொண்டு போய் சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

    English summary
    Shruthi Haasan Head Shaving Done on My Lap only Says Santhana bharathi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X