»   »  'செம்ம உற்சாகம்'.... அப்பா கமல் படப்பிடிப்பில் மகள் ஸ்ருதியின் முதல் நாள் அனுபவம்!

'செம்ம உற்சாகம்'.... அப்பா கமல் படப்பிடிப்பில் மகள் ஸ்ருதியின் முதல் நாள் அனுபவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் முதல் நாள் அனுபவம் மிகவும் உற்சாகம் தருவதாக இருந்ததாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸனுடன் ஸ்ருதி நடிக்கும் முதல் படம் சபாஷ் நாயுடு. கமலுக்கு மகளாகவே இந்தப் படத்தில் நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.


80 சதவீதம்

80 சதவீதம்

இந்தப் படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் அமெரிக்காவில் படமாகிறது. படக்குழுவினருடன் கடந்த வாரமே அமெரிக்கா சென்றுவிட்டார் கமல். இப்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


கமல் என்ற உற்சாகம்

கமல் என்ற உற்சாகம்

இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்ற அனுபவத்தை ஸ்ருதிஹாஸன் பகிர்ந்து கொண்டுள்ளார். "அப்பா படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அந்த இடமே முழு நம்பிக்கை நிறைந்த உற்சாக உலகமாக மாறிவிடும். தன்னை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்," என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி.


முதல் நாளில்

முதல் நாளில்

மேலும் அவர் கூறுகையில், "முதல் நாள் படிப்பிடிப்பு அட்டகாசமாக இருந்தது. அப்பாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி, கவுரவம். அவர் உற்சாகமான உத்வேகத்தை கொண்டு வந்துவிடுகிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலே போதும், அந்த உற்சாக சக்தி எனக்குள் பரவிவிடுகிறது," என்றார்.


சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

தசாவதாரத்தில் கமல் நடித்த 10 பாத்திரங்களில் ஒன்றான பல்ராம் நாயுடுவின் நகைச்சுவை விரிவாக்கம்தான் சபாஷ் நாயுடு. இந்தப் படத்துக்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலும் இளையராஜாவும் இணைந்துள்ளனர்.


English summary
Shruthi Hassan shared her first day shooting experience in Kamal Hassan's Sabash Nayudu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil