»   »  பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?

பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Shruthi, Samantha, Siddharth to campaign for EC

அப்போது அவர் கூறுகையில்,

சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் மக்களை கேட்டுக் கொள்ளப்படும். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்களை தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம். விரைவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு குறும்படம் எடுக்க உள்ளோம்.

மேலும் நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகளை வைத்தும் குறும்படம் எடுக்க உள்ளோம் என்றார்.

English summary
TN CEO Rajesh Lakhoni said that Election commission will make a shortfilm with Shruthi Haasan, Samantha and Siddharth asking people to vote in the forthcoming assembly election.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil