»   »  சிங்கம் 3... சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா, ஸ்ருதிஹாஸன்!

சிங்கம் 3... சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுஷ்கா, ஸ்ருதிஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கம் 3 கதை திரைக்கதை பக்காவாக தயாராகிவிட்டது. இப்போது நடிக நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஹரி.

சூர்யா - ஹரி காம்பினேஷனில் இது 5வது படம். ஏற்கெனவே இருவரும் பணியாற்றிய ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 என அத்தனையும் ஹிட்.

இதுவா தொடர்ச்சி?

இதுவா தொடர்ச்சி?

தொடர்ச்சி என்று கூறிவிட்டு, வேறு வேறு கதைகளைப் படமாக்குவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதைகள் கொண்டவை. ஆனால் இவற்றை தொடர்ச்சி என்று கூறி வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.

இதுதான் தொடர்ச்சி..

இதுதான் தொடர்ச்சி..

ஆனால் ஹரி அப்படியல்ல. சிங்கம் படத்தின் தொடர்ச்சிதான் சிங்கம் 2. அதற்கேற்ற மாதிரிதான் கதையை முடித்திருப்பார். அதேபோலத்தான் சிங்கம் 2 படத்தின் க்ளைமாக்ஸும். ஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது, இதுதான் முதல் முறை. மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே இயக்குநர், ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் இதுதான் முதல் தடவை.

இந்த முறை அனுஷ்காவுடன் ஸ்ருதிஹாசன்

இந்த முறை அனுஷ்காவுடன் ஸ்ருதிஹாசன்

‘சிங்கம்' படத்தில், சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் ஜோடிகளாக வந்தார்கள். ‘சிங்கம்-3' படத்தில் அனுஷ்காவுடன் இடத்தைப் பங்கு போட வருபவர் ஸ்ருதிஹாஸன். ராதாரவி, விஜயகுமார், நாசர் என மற்ற கேரக்டர்களும் தொடர்கிறார்கள்.

வில்லன் - ஹீரோ

வில்லன் - ஹீரோ

சிங்கம், சிங்கம் 2-ல் முழுக்க நல்லவராக வந்தார் சூர்யா. ஆனால் மூன்றாம் பாகத்தில் பாதி வில்லன், பாதி நல்லவனாக வருகிறாராம். சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நான்காவது படம் இது.

கதைக்காக 9 மாதங்கள்

கதைக்காக 9 மாதங்கள்

படம் குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், "இந்த படத்தின் கதைக்காக 9 மாதங்கள் செலவிட்டு இருக்கிறேன். நான் இதற்கு முன்பு இயக்கிய ‘சாமி,' ‘சிங்கம்' மாதிரி உறுதியான கதை இது. கதையும், திரைக்கதையும் தரமானதாக இருந்தால், வெற்றி நிச்சயம் என்பது என் கணிப்பு.

அனிருத்

அனிருத்

‘சிங்கம்-3'க்கு அனிருத் இசையமைக்கிறார். என் இயக்கத்தில், சூர்யா படத்துக்கு அனிருத் இசையமைப்பது, இதுவே முதல் முறை. முதல் இரு பாகங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

தூத்துக்குடியை விட முடியுமா?

தூத்துக்குடியை விட முடியுமா?

படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கோவா மற்றும் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்," என்றார்.

English summary
Director Hari is gearing up to go to shooting for his third sequel of Singam with Surya. This time Shruthi Hassan is going to share the screen with Anushka in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil