Just In
- 19 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 52 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல் 60: ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சினிமாத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஏராளமான பரிசுகள் வந்தாலும் தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்த வாழ்த்தையே ஸ்பெஷல் பரிசாக கருதுகிறார்.
ஸ்ருதியும், அக்ஷராவும், கமல் மீது அளவு கடந்த பாசம் வைத்து உள்ளவர்கள். பல கஷ்டங்கள் வந்த போதிலும் அப்பாவுடன் தோள் குடுக்க தவறியதே கிடையாது. அன்பு மகள்களாக, கமலின் வழி காட்டுதலின் பெயரில் பல வெற்றி, தோல்விகளை மிக சகஜமாக எடுத்து கொண்டு பல பல துறைகளில் பல சாதனைகள் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, ஒரு தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும், அதே நேரத்தில் தனது கட்சியை பலப்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில்தான் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவருடைய ரசிகர்கள், சினிமா துறையினர், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் #கமலிசம் என்ற வார்த்தையும் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா தொடங்கி தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் இந்தியன் 2 ஸ்டில்கள் வரை, அந்த கமலிஸத்தில் இடம் பிடித்து வருகின்றன.
எத்தனையோ வாழ்த்துக்கள் வந்தாலும் அன்பு மகள் ஸ்ருதியிடம் இருந்து வந்தது சிறப்பு பரிசாகவே கமல் கருதுகிறார். ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்பாவுடைய பொக்கிஷமான நடிப்பை கவுரப்படுத்தி எழுதி உள்ளார்.
ஸ்ருதிஹாசன் வாழ்த்து
அன்புள்ள பாபுஜி, நடிப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து எங்களை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எங்களில் பலருக்கும் ஊக்கமளித்திருக்கிறீர்கள். தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமான மகாநதி படத்தின் போஸ்டரை பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளேன்.
அழகான, தைரியமான, உணர்ச்சிப்பூர்வமான வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். கலைத்துறைக்கு 60 ஆண்டுகளாக உங்களை நீங்கள் அர்ப்பணித்துக்கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேல் உங்களுடைய கலைப் பயணம் தொடரட்டும், என ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த 60 எனும் எண். (வெறும் எண்ணிக்கை தான், பல நம்பிக்கை இன்னும் உள்ளது). இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கமல் ஓடி கொண்டு இருக்கிறார்.