»   »  விஜய் வில்லனுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

விஜய் வில்லனுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் வில்லனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்!

சென்னை : கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'சங்கமித்ரா'. திடீரென அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ஸ்ருதி.

 Shruti haasan to act with vijay films villain

அதன் பின் ஸ்ருதிஹாசன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தனர். இதற்கிடையே அவர் லண்டன் நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். விரைவில் அவரை ஸ்ருதிஹாசன் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திருமணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் , ஸ்ருதி படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actress Shruti Haasan is to act with Vidyut Jamwal in a movie. The shooting of this film will begin next month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X